இந்து பௌத்த மக்களின் வாழ்வியல் சடங்குகளுக்டகிடையிலான பரஸ்பரத் தொடர்புகள்: கேகாலை மாவட்டம் தெஹியோவிட்ட பிரதேசத்தை மையப்படுத்திய ஆய்வு.

Show simple item record

dc.contributor.author துஷாந்தி, சிதிரிசேன
dc.date.accessioned 2024-08-02T05:54:13Z
dc.date.available 2024-08-02T05:54:13Z
dc.date.issued 2023
dc.identifier.citation FAC 1210 en_US
dc.identifier.uri http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15428
dc.description.abstract மனித வாழ்வானது வளம்பெற வேண்டும் என்று கட்டமைக்கப்பட்ட ஒழுக்க நெறியாகவே பண்பாட்டுக் கூறுகளும் சடங்கு சம்பிரதாயங்களும் காணப்படுகிறது.காட்டுமிராண்டித் தனத்திலிருந்து மனிதனை ஒரு சுமூகமான நடைமுறை வாழ்வை வாழ வைப்பதற்கு சடங்குகள் மிக அவசியம்.மனிதன் பிறந்தது முதல் இறந்த பிறகும் ஆன்மாவின் நன்மை கருதி செய்யப்படுபவை எல்லாம் வாழ்வியல் சடங்குகள் ஆகும்.இவ்வாறாக மனிதன் பிறந்தது முதல் செய்யப்படுபவை பூர்வாங்கக் கிரியை என்றும், மனிதன் இறந்தப் பிறகு செய்யப்படுபவை அபரக்கிரியை என்றும் அழைக்கப்படுகிறது அந்த வகையில், இலங்கை நாடானது பல்லிண மக்கள் சமூகங்ககை கொண்ட நாடாகும். இப்பல்லிண மக்கள் சமூகத்தில் பௌத்தர்களும் இந்துக்களுமே அதிகமாக வாழ்கின்றன. இதில் கேகாலை மாவட்டம் தெறியோட்ட பிரதேசத்தில் இந்து, பௌத்த மக்களின் வாழ்வியலில் காணப்படும் பரஸ்பரத் தொடர்பினை ஆராய்வதே இவ்வாய்வாகும். பௌத்தர்களும் இந்துக்களும் அதிகளவாக வாழும் பிரதேசத்தை கண்டறிந்து அவர்களால் ஆற்றப்படும் சடங்குகளை இணங்கானுதல், இவ்விரு மதத்தவரினால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பொதுவான சம்பிரதாயங்க இணங்கானுதல, இதில் இவர்களுக்கே உரித்தான சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களை அடையாளப்படுத்துதல், இவ்விரு மதத்தினரால் செய்யப்படும் சடங்குகளில் பங்கு கொள்வர்களின் முக்கியத்துவம்,காலம் காலமாக இவர்கள் மத்தியில் செய்யப்பட்டு வரும் சம்பிரதாயங்கள் மீதான நம்பிக்கை. பாரம்பரியமான சம்பிரதாயங்களை கைவிடாமல் இன்று வரையிலும் தமது சந்ததிக்கு தெரிவிக்கும் முகமாக செய்யும் சடங்குகள் போன்றவற்றினை தெளிவுப்படுத்தலாகவே இவ்வாய்வானது அமைகின்றது. இவ் ஆய்வானது இலங்கையில் பௌத்த மதத் தோற்றம் மற்றும் தொன்மையான இந்து மதத்தின் வளர்ச்சி போக்கு. இன்றைய காலக்கட்டத்தில் இவ்விரு மதங்களின் பரஸ்பரத் தொடர்பு போன்றவற்றினை இலக்கியங்கள், ஆய்வுகள், நேர்க்காணல் என்பவற்றினை அடிப்படையாகக் கொண்டு விளக்குவதாக அமைந்துள்ளது. இவ்விரு மதத்தினரும் எந்தவொரு உள்நோக்கங்களோ, உடன் படிக்கையோ இல்லாமல். காலம் காலமாக ஒன்றுப்பட்ட வாழ்வியல் சடங்கு முறைகளை நடாத்தி வருகின்றனர். இதனை தெளிவுப்படுத்தி எமது சமூகத்தில் சமூக நல்லிணக்கத்தை பேண வைப்பதாக இவ் ஆய்வானது அமைந்துள்ளது. en_US
dc.language.iso other en_US
dc.publisher Faculty of Arts & Culture en_US
dc.subject இந்து பௌத்த மக்களின் வாழ்வியல் en_US
dc.subject கேகாலை மாவட்டம் en_US
dc.subject தெஹியோவிட்ட பிரதேசம் en_US
dc.subject சடங்குகளுக்டகிடையிலான பரஸ்பரத் தொடர்புகள் en_US
dc.title இந்து பௌத்த மக்களின் வாழ்வியல் சடங்குகளுக்டகிடையிலான பரஸ்பரத் தொடர்புகள்: கேகாலை மாவட்டம் தெஹியோவிட்ட பிரதேசத்தை மையப்படுத்திய ஆய்வு. en_US
dc.type Thesis en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search


Browse

My Account