Abstract:
தென்னாசியாவில் இந்தியா நீண்ட தொடர்ச்சியான வரலாற்றுப் பாரம்பரியங்களைக் கொண்ட
நாடாக விளங்குகின்றது. அந்தவகையில் இந்தியாவில் ஏராளமான இந்துசமயம்சார்
தொல்லியல் சின்னங்களும், அழிந்த நகரங்களும் காணப்படுகின்றன. அவற்றுள் ஐந்து
நகரங்களைத் தெரிவு செய்து அந்நகரங்களின் தொன்மையும், தொடர்ச்சியான வரலாற்றைக்
கொண்டமையை நிரூபிக்கும் வகையில் ஏராளமான தொல்லியற் சின்னங்கள்
காணப்படுகின்றன. இவ்விடங்களில் ஆராய்ச்சிகள் பல மேற்கொண்டு இருந்தாலும்,
இந்நகரங்களைப பற்றிய முழுமையான விபரங்கள் வெளிக்கொணரப்படவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
இந்நகரங்களை மேலும் அகழாய்வுகளிற்கு உட்படுத்தும் போது தமிழரின் பெருமை உலக அரங்கில் போசப்படும். அழிந்த நகரங்களாக அடையாளப்படுத்தப்பட்ட ஐந்து நகரங்களாவன.சிந்துவெளி நாகரிகம், குமரிக்கண்டம், பூம்புகார், அரிக்கன்மேடு, ஆதிச்சநல்லூர் என்பனவாகும். இவ்விடங்களை அகழாய்வு செய்யும்பொழுது (நில அகழாய்வு, கடலகழ்வாய்வ) அழிபாட்டு கட்டடங்கள், மட்பாண்டங்கள், செங்கற்கள், ஈமத்தாழிகள், தெய்வச் சிலைகள், பிராமி ஓடுகள், மதுச்சாடிகள் எனப் பல பொருட்கள் கண்டறியப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது. இச் சின்னங்கள் ஒவ்வொரு நகரத்தின் வரலாற்றுத் தொன்மையை எடுத்துக்காட்டுபவையாக அமைகின்றது. இந்நகரங்களில் வாழ்ந்தவர்களது வாழ்க்கைமுறை என்பவற்றைக் கூறுவதோடு இந்நகரங்கள் என்னக் காரணத்தினால் அழிந்தது என்பது பற்றியும், சில நகரங்கள் அழிந்தமைக்கான காரணம் இன்றளவும் அறியப்படாமல் இருப்பதும், அதற்கான வழிமுறைகளை எவ்வாறு கைக்கொள்ளலாம் என்பது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆரம்பகாலத்தில் இந்நகரங்களின் விஸ்தரிப்பு ஏனைய நாடுகளுடன் இருந்தாலும் இன்று இந்நகரங்களின் விஸ்தரிப்பு ஏனைய நாடுகளுடன் இருந்தாலும் இன்று இந்நகரங்களின் நிலை என்னவென்பதும் இந்நகரங்கள் தமிழரின் பிறப்பிடமாக இருந்துள்ளது என்பதனை நிருபிக்கவும், ஆய்வாளர்கள் தொழில்நுட்ப உதவிகொண்டும் கடலாய்வுகள் மேற்கொண்டும் அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் முறையும் கூறப்பட்டுள்ளது. அழிவடைந்து செல்லும் இந்துசமயம்சார் தொல்லியல் சின்னங்களின் மூலம் இவ்வழிந்த நகரங்களின் வரலாற்றுத் தொன்மையினை வெளிக்கொணர்வதால் உலக வரலாற்றில் தமிழர்களிற்கான மதிப்பு உயரும்.