'நாவற்குழி திருவாசக அரண்மனை, கொக்கட்டிச்சோலை திருமந்திர அரண்மனை உருவாக்கத்தில் கலாநிதி ஆறு.திருமுருகனின் பங்களிப்பு'

Show simple item record

dc.contributor.author லக்ஸ்சனா, தவராசா
dc.date.accessioned 2024-08-05T04:06:38Z
dc.date.available 2024-08-05T04:06:38Z
dc.date.issued 2023
dc.identifier.citation FAC 1214 en_US
dc.identifier.uri http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15434
dc.description.abstract நீண்டகால வரலாற்றைக் கொண்ட இந்துசமயம் பல தலைமுறைகளாக பண்பாடு, கலை,கலாசாரம், இந்து இலக்கியங்கள் என்பவற்றை பாதுகாக்கின்றது. இவை அன்று தொட்டு இன்று வரை சமயப்பெருந்தகைகளினால் பேணிப்பாதுகாக்கப்பட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் ஈழத்திலும் சைவப்பெருந்தகைகள் தோற்றம் பெற்றுள்ளனர். அவர்களில் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் குறிப்பிடத்தக்கவர் சிவபூமியின் அறக்காவலனாக இருந்து சைவசமயத்தை வளர்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இந்து சமய இலக்கியங்கள் நூல் வடிவங்களிளும், இணையவழிகளிலும் பாதுகாக்கப்படுகின்றன. இவற்றை அழியாது பாதுகாப்பதற்காக அரண்மனையினை அமைத்து புதிய முயற்சிக்கு வித்திட்டார். இவை எதிர்காலத்திற்கும் பாதுகாப்பாக அமையும் என நம்பப்படுகிறது. "நாவற்குழி திருவாசக அரண்மனை, கொக்கட்டிச்சோலை திருமந்திர அரண்மனையின் உருவாக்கத்திற்கு ஆறு. திருமுருகனின் பங்களிப்பு" என்ற தலைப்பில் செய்யப்பட்ட இவ்வாய்வானது ஆறு திருமுருகனின் சமய, சமூக பணிகளை வெளிப்படுத்தல், சிவபூமி அறக்கட்டளையின் பணிகளை விபரித்தல், நாவற்குழி சிவபூமி திருவாசக அரண்மனை தொடர்பான விடயங்களை ஆராய்தல், கொக்கட்டிச் சோலை சிவபூமி திருமந்திர அரண்மனை தொடர்பான விடயங்களை ஆராய்தல், போன்றவற்றை நோக்காகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாய்வானது ஆறு. திருமுருகன் நேர்காணல், இணையக் காணொளிகள், நேரடி அவதானம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு விளக்குவதாக அமைந்துள்ளது. களஆய்வு, பகுப்பாய்வு, விபரணஆய்வு போன்ற ஆய்வு முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. திருவாசக அரண்மனை, திரமந்திர அரண்மனை அமைவிடம். திருவாசக, திருமந்திர பொறிப்பு முறை, வழிபாட்டு முறைகள், நுண்கலைவளர்சி, அரண்மனைகளின் சிறப்புகள், அரண்மனை வெளிப்படுத்தும் பண்பாட்டுக் கோலம் சமூகநல்லுறவு போன்றவற்றை சமூகத்திற்கு வெளிப்படுத்தும் வகையில் இவ்வாய்வு அமைகிறது. இவ்வாய்வானது இது போன்ற புதிய சிந்தனைகளின் தோற்றம் பெறுவதற்கு வழிவகுக்கும். en_US
dc.language.iso other en_US
dc.publisher Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka en_US
dc.subject கலாநிதி ஆறு.திருமுருகன் en_US
dc.subject திருவாசக அரண்மனை en_US
dc.subject திருமந்திர அரண்மனை en_US
dc.subject கருங்கல் தேர் en_US
dc.title 'நாவற்குழி திருவாசக அரண்மனை, கொக்கட்டிச்சோலை திருமந்திர அரண்மனை உருவாக்கத்தில் கலாநிதி ஆறு.திருமுருகனின் பங்களிப்பு' en_US
dc.type Thesis en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search


Browse

My Account