Abstract:
மனித மூலதனமானது பௌதீக மூலதனத்தைப் போலவும் கல்வி, சுகாதாரம். மற்றும் பயிற்சி அதன் விளைவான வெளியீடுகளை உயர்த்துவதோடு பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கின்றது. இவ்வாய்வின் நோக்கம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் மனித மூலதனத்தின் தாக்கத்தைக் கண்டறிதலாகும். இவ்வாய்வானது இரண்டாம் நிலைத்தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1990 தொடக்கம் 2021 வரையான காலத்தொடர் தரவுகள் பெறப்பட்டுள்ளன. தரவுகள் Eviews கணினி மென்பொருளின் துணையுடன் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. இவ்வாய்வில் பொருளாதார வளர்ச்சி சார்ந்த மாறியாகவும் மனித மூலதனம் சாரா மாறியாகவும் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது. இவ் ஆய்வில் பொருளாதார வளர்ச்சிக்கான பதிலி மாறியாக ( Proxy Variable) மொத்த உள்நாட்டு உற்பத்தியும் அதேபோல் மனித மூலதனத்திற்கான பதிலி மாறிகளாக ( Proxy Variables ) மனித அபிவிருத்திச் சுட்டெண். கல்விக்கான அரச செலவீட்டு வீதம், சுகாதாரத்திற்கான அரச செலவீட்டு வீதம். சேமிப்பு. வெளிநாட்டு நேரடி முதலீடு, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி போன்ற மாறிகளும் இடைத் தொடர்பு மாறிகளாக மனித அபிவிருத்திச் சுட்டெண்ணுடன் சேமிப்பு, வெளிநாட்டு நேரடி முதலீடு, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி போன்ற மாறிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இம்மாறிகளுக்கிடையிலான தொடர்பினை பரீட்சிப்பதற்காக வரைபடங்களும், விபரண புள்ளிவிபரவியல் நுட்பம் ( Descriptive Statistics ). அலகு மூலச் சோதனை (Unit root test ). ஒருங்கிணைவுப் பகுப்பாய்வு (Co - integration Analysis ), மற்றும் வழுச்சரிப்படுத்தல் மாதிரி (Error Correction Model ) போன்ற பொருளியலளவை முறைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வின் பகுப்பாய்வுப் பெறுபேறுகளின் படி. இதன்போது மொத்த உள்நாட்டு உற்பத்தி (பொருளாதார வளர்ச்சி). மனித அபிவிருத்தி சுட்டெண் மற்றும் சுகாதாரத்துக்கான அரசாங்க செலவீட்டு வீதம் ஆகியவற்றிக்கிடையில் நேர்க்கணிய தொடர்பு கொண்டு காணப்படுவதுடன் கல்விக்கான அரசாங்கத்தின் செலவீட்டு வீத்திற்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்குமிடையில் எதிர்க்கணியத் தொடர்பானது நிலவுகின்றது எனவும் தெளிவான முடிவுகள்
கிடைக்கப்பெற்றுள்ளன.