dc.description.abstract |
நாட்டினுடைய பொருளாதாரத்தினை வலுப்படுத்துகின்ற பிரதான காரணியாக வெளிநாட்டு நேரடி முதலீடு காணப்படுகின்றது. இலங்கையில் இடம்பெற்ற ஆட்சி மாற்றங்கள் வெளிநாட்டு நேரடி முதலீட்டு உட்பாய்ச்சலின் மீது எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன என்பதனை கண்டறிவதனை பிரதான நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வில் தரவுப் பகுப்பாய்விற்காக Eviews-10 மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் ARDL பொருளியலளவை பகுப்பாய்வு அணுகுமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆய்வில் 1995 தொடக்கம் 2021 வரையிலான காலத்தொடர் தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் சார்ந்த மாறியாக வெளிநாட்டு நேரடி முதலீட்டு தேறிய உட்பாய்ச்சல் காணப்படுவதுடன் சாரா மாறிகளாக ஆட்சி மாற்றம், மொத்த உள்நாட்டு உற்பத்தி, நாணய மாற்று வீதம், வர்த்தக திறந்த தன்மை, பணவீக்கம், உள்நாட்டு வட்டி வீதம் போன்ற மாறிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆட்சி மாற்றமானது காலப்பகுதி அடிப்படையில் பிரிக்கப்பட்டு போலி மாறியாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆய்வின் முடிவுகளின்படி, இலங்கையில் இடம்பெற்ற ஆட்சி மாற்றங்களானவை வெளிநாட்டு நேரடி முதலீட்டு உட்பாய்ச்சலின் மீது புள்ளிவிபர ரீதியில் பொருளுண்மைத்தன்மை வாய்ந்த வகையில் எந்தவித தாக்கத்தினையும் செலுத்தவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. மேலும், மொத்த உள்நாட்டு உற்பத்தி, வர்த்தக திறந்த தன்மை, பணவீக்கம் போன்ற மாறிகள் நீண்ட காலத்தில் புள்ளிவிபர ரீதியாக பொருளுண்மைத்தன்மை வாய்ந்த வகையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் மீது நேர்க்கணிய தாக்கத்தினை செலுத்துகின்ற அதேவேளை நாணய மாற்று வீதம் எதிர்க்கணிய தாக்கத்தினை செலுத்துவதுடன் குறுங்காலத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, வர்த்தக திறந்த தன்மை, பணவீக்கம் போன்ற மாறிகள் புள்ளிவிபர ரீதியாக பொருளுண்மைத்தன்மை வாய்ந்த வகையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் மீது நேர்க்கணிய தாக்கத்தினை செலுத்துகின்ற அதேவேளை உள்நாட்டு வட்டி வீதம் எதிர்க்கணிய தாக்கத்தினை செலுத்துகின்றது.
எனவே, இலங்கையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டு உட்பாய்ச்சலினை தீர்மானிப்பதில் ஆட்சி மாற்றம் தவிர்ந்த ஏனைய காரணிகள் மிகப் பிரதான பங்களிப்பினை வழங்குகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், கொள்கை வகுப்பாளர்கள் வெளிநாட்டு நேரடி முதலீட்டு உட்பாய்ச்சலினை அதிகரிப்பதற்கு கவர்ச்சிகரமான நம்பகத்தன்மையான முதலீட்டுக் கொள்கைகளை உருவாக்குவதுடன் குறைந்தளவான ஊழல், இன நல்லிணக்கம், உட்கட்டமைப்பு விருத்தி, சிறந்த வெளியுறவுக் கொள்கை என்பனவற்றில் கவனம் செலுத்த வேண்டும். |
en_US |