dc.description.abstract |
இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் ஊழிய இடப்பெயர்வு மற்றும் வெளிநாட்டு பணவனுப்பல்கள் பாரியதொரு பங்களிப்பினை ஆற்றுகின்றன. இருந்த போதும் இது தொடர்பான சவால்களினை இலங்கை எதிர்கொண்டு வருகின்றது.ஊழிய இடப்பெயர்வு மற்றும் வெளிநாட்டு பணவனுப்பல்களுக்கிடையில் காணப்படும் தொடர்புகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் எவ்வறான செல்வாக்கு செலுத்துகின்றன என்பதை அறியும் நோக்கில் 1990- 2020 கால ஆண்டு தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.சார்ந்த மாறியாக பொருளாதார வளர்ச்சியும் பிரதான சாராமாறியாக ஊழிய இடப்பெயர்வு மற்றும் வெளிநாட்டு பணவனுப்பல்களும் துணை சாரா மாறிகளாக பணவீக்கம், வெளிநாட்டு நேரடி முதலீடு என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன. ARDL, ECM, Granger Causality அணுகுமுறைகள் பயன்படுத்தப்பட்டு முடிவு எய்தப்பட்டுள்ளது. எனவே இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் வெளிநாட்டு பணவனுப்பல்கள் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடு போன்ற மாறிகள், நீண்டகாலம் மற்றும் குறுங்காலத்தில் நேர்கணிய தாக்கத்தினை கொண்டதாக காணப்படுகிறன. அவ்வாறே ஊழிய இடப்பெயர்வு மற்றும் பணவீக்கம் போன்ற மாறிகள், நீண்டகாலம் மற்றும் குறுங்காலத்தில் எதிர்கணிய தாக்கத்தினை செலுத்துகின்றன. பொருளாதார வளர்ச்சியானது ஊழிய இடப்பெயர்வின் மீதும், வெளிநாட்டு பணவனுப்பல்கள் பொருளாதார வளர்ச்சியின் மீதும், பணவீக்கமானது வெளிநாட்டு முதலீட்டின் மீதும் ஒரு வழி காரண காரிய தொடர்பினை கொண்டுள்ளன. மேலும் வழுச்சரிப்படுத்தல் குணகமானது வெளிவாரி அதிர்ச்சிகளின் காரணமாக பொருளாதார வளர்ச்சியில் ஏற்படுகின்ற குறுங்கால சமனிலையின்மையினை ஒரு வருடத்திற்குள் அண்ணளவாக 109% வேகத்தில் சரிப்படுத்தப்பட்டு நீண்டகால சமநிலையை நோக்கி நகர்வடைகின்றது என்பது ஆய்வின் மூலமாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே இலங்கை அரசானது. மூளைசாலிகளின் இடப்பெயர்வினை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு தொழிலாளர் பணவனுப்பல்களை அதிகரிக்க திறன் குறைந்த ஊழியர்களுக்கு பயிற்சியளிப்பதன் மூலம் தேர்ச்சியுடையவர்களாக மாற்றியமைத்து வெளிநாட்டு நாணயத்தை நாட்டிற்கு கொண்டுவர வினைத்திறனான நடவடிக்கைகளை எடுப்பது இலங்கை பொருளாதாரத்திற்கு சாதகமாக அமையும். |
en_US |