dc.description.abstract |
"சிங்கள மற்றும் முஸ்லிம் இனத்தவர்களுக்கிடையிலான நல்லிணக்க முயற்சிகளும் இலங்கையில் இடம்பெற்ற முக்கிய கலவரங்களை மையப்படுத்திய ஆய்வு" என்கின்ற தலைப்பில் இவ்வாய்வு அமைந்துள்ளது. அந்தவகையில், 1915ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையிலே சிங்கள மற்றும் முஸ்லிம் இனத்தவர்களுக்கிடையில் இடம் பெற்ற முக்கியமான கலவரங்கள் குறித்தும் நல்லிணக்கத்தை கொண்டுவர முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்தும் ஓர் தெளிவினை வழங்க வேண்டுமென்கிற நோக்கில் இவ்வாய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. பல்லினக் கலாசாரங்கள் பின்பற்றப்படுகின்ற இலங்கையில் நல்லிணக்கம் என்பது மிகவுமே அவசியமாகின்றது என்பதனைக் கருத்திற் கொண்டு நல்லிணக்கத்துடன் வாழ்ந்திட முயற்சித்தாலும் இரண்டு இனத்தவர்களுக்கிடையிலும் இடையிடையே முரண்பாடுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். அத்துடன், இரண்டாம் நிலைத் தரவுகளை ஆய்வு அணுகுமுறைகளாகக் கொண்டு. நூல்கள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள், ஆய்வுசார் கட்டுரைகள், பத்திரிகைகள் போன்றவற்றினுடையத் துணையுடன் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிங்கள மற்றும் முஸ்லிம் இனத்தவர்களுக்கிடையில் 1915ம் ஆண்டு துளிர்விட்ட முரண்பாடுகள் யுத்தத்திற்குப் பின்னராக வேகமாக அதிகரித்துள்ளன. பல்லினக் கலாாரச் சூழலிலே இரண்டு இனத்தவர்களிடையேயும் இடம்பெற்றக் கலவரங்கள் தனி நபர்கள், தனிக் குழுக்கள் சார்ந்ததாகத் துவங்கி, பின்னர் இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற விதமான கலவரங்களாக மாற்றமடைந்தன. பேசித்தீர்த்துக் கொள்ள முடியுமான அநேக முரண்பாடுகள் புரிந்துணர்வின்மை, அடிப்படைவாதச் சிந்தனைகள், இனவாதம் போன்ற பல்வேறு காரணங்களினால் பாரிய கலவரங்களாக வீரியமடைந்தன. முரண்பாடுகளின் காரணமாக உடல், உள, சமூக, பொருளாதார, கலாசார ரீதியாக பல்வேறுபட்டப் பாதிப்புகள் ஏற்பட்டன. அத்துடன், பல்சமய உரையாடல், இளைஞர்கள் மத்தியிலான நல்லிணக்க முயற்சிகள், கல்விசார்ந்தச் செயற்திட்டங்கள், கலாசார நிகழ்வுகள் போன்ற வழிமுறைகளில் நல்லிணக்க முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று, சிங்கள மற்றும் முஸ்லிம் இனத்தவர்களுக்கிடையில் முரண்பாடுகள் மற்றும் கலவரங்களும் ஏற்பட்டபோதும் கூட நல்லிணக்க முயற்சிகளின் காரணமாக இணக்கப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டன. எனவே, உரிய திட்டங்களையும், வழிவகைகளையும் மேற்கொள்வதூடாக முரண்பாடுகள் இல்லாத நல்லிணக்கமான ஒரு சமூகத்தினை உருவாக்கலாம். |
en_US |