Abstract:
மீட்பின் திட்டத்தை மானிட சந்ததிக்கு இறுதிவரை எடுத்துச் செல்ல இயேசு கிறிஸ்து திருத்தூதர் பேதுரு தலைமைத்துவத்தின் கீழ் திருச்சபையை நிறுவினார். அந்த திருச்சபையானது ஒரே திருச்சபையாக ஆரம்ப காலங்களில் காணப்பட்டாலும் காலப்போக்கில் மாறுபட்ட புதிய போதனைகளினால் திருச்சபை பிளவுபட்டு இரு பெரு பிரிவுகளாக காணப்படுகிறது. ஆகவே திருச்சபையின் பிளவுக்கான காரணங்களை ஆராயும் பொருட்டு "வரலாற்று நோக்கில் மரபுவழி கிறிஸ்தவ சபைகளுக்கும் சுயாதீன சபைகளுக்குமிடையிலான ஓர் ஒப்பாய்வு” என்ற தலைப்பின் ஊடாக இயேசுவினால் அழைப்புப் பெற்று அவருக்குரிய ஒரே திருச்சபையின் ஒன்றிப்பு வெளிவாரியாக தெளிவுப்படுத்தப்படவும், திருச்சபை எவ்வாறு பிளவுபட்டு போதனைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு அதனுடைய வழிமுறைகள் எவ்வாறு பின்பற்றப்படுகிறது என்பதை தெளிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் வரலாற்றை மையப்படுத்திய இவ்வாய்வானது நோக்கத்தினை அடைந்துக் கொள்ளும் வகையில் பண்புசார் அளவை நிலை ஆய்வாக நோக்கப்படுகிறது. நேர்காணல், உரையாடல் மற்றும் அவதானிப்பு மூலம் பெற்ற முதலாம் நிலைத்தரவுகளையும், இரண்டாம் நிலைத்தரவுகளான நூல்கள், திருவிவிலியம், சஞ்சிகைகள், இணையத்தள தகவல்கள் போன்றவற்றையும் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெறப்பட்ட தரவுகள் வரலாற்று பகுப்பாய்வு மற்றும் விபரணப் பகுப்பாய்வு முறை மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. இவ்வாய்வின் பெறுபேறுகளின் படி மரபுவழி கிறிஸ்தவ சபைகளும் சுயாதீன சபைகளும் போதனைகளின் அடிப்படையில் தமக்குள் பிளவுபட்டு இருந்தாலும் அவர்களுக்கிடையில் பல ஒன்றுபட்ட போக்குகளும் காணப்படுகின்றது என்பதே இவ்வாய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.