Abstract:
பண்பாடு என்பது வாழ்க்கை முறை (Way of Life) ஆகும். ஒரு சமூதாயத்தில் வாழும் மக்களின் பெருமைகளையும், எண்ணங்களையும், ஒருமித்த நடத்தைகளையும் வெளிப்படுத்தும் மையப்புள்ளியாகப் பண்பாடு காணப்படுகிறது. பண்பாட்டின் பாரிய சிதறல் என்பது நவநாகரீகத்தின் தாக்கம் ஆகும். இவ்வாறான தாக்கத்தினால் ஏற்படும் பாரிய பிரச்சனைகளை ஆராயும் பொருட்டு பாரம்பரிய இந்து சமூகப் பண்பாட்டில் சமகால நாகரீகத்தின் தாக்கம் - யாழ்ப்பாண மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒப்பீட்டாய்வு என்ற தலைப்பின் ஊடாக யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பாரம்பரிய இந்து சமூகப் பண்பாட்டு முறைகளையும், அதன் நன்மைகளையும், அவற்றின் தேவைகளையும் தற்கால மற்றும் எதிர்கால சந்ததிக்கு நினைவுபடுத்தி அவற்றைப் பின்பற்ற வைப்பதைப் பிரதான நோக்கமாகக் கொண்டு இந்து சமூகப் பண்பாட்டின் ஆரம்ப காலம், தற்காலப் பாரம்பரியங்களை ஒப்பீட்டாய்வு செய்வதன் மூலம் எதிர்கால ஆய்வு முயற்சியாளர்களின் அறிவு விருத்திக்கு உதவியாக இருக்கும்.
ஆய்வின் முறையியலாக அளவை முறைத் தகவல்கள் மூலம் தரவுகளைச் சேகரித்தல் முதன்நிலைத் தரவுகளாக விளங்குகின்றன. இரண்டாம் நிலைத்தரவுகளாக நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் மற்றும் இணையத்தளத் தரவுகள் என்பன இவ்வாய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேற்கொள்ளப்பட்டது. இவற்றைப் பயன்படுத்தி பண்புசார் ரீதியான ஆய்வு
நவநாகரீகத் தாக்கத்தின் விளைவால் சமூக நல்லுறவில் ஏற்பட்ட முரண்பாடுகளைச் சீர்செய்தல், பாரம்பரிய இந்து சமூகப் பண்பாட்டில் சமகால நாகரீகம் ஏற்படுத்திய தாக்கத்தினையும், அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் கண்டறிவதன் மூலம் தற்கால சந்ததியினரும், எதிர்காலச் சந்ததியினரும் தவறான கலாசாரத்தைப் பின்பற்றுவதனை இல்லாது செய்தலாகும். அவற்றை ஆராய்ந்து தற்காலத்தில் ஏற்படும் பாதிப்புக்களைச் சரிசெய்து எதிர்காலத்திற்கு சிறந்த பாதையை உருவாக்க முடியும்.