dc.contributor.author |
ஜனுராஜ், கோணேஸ்வரன் |
|
dc.date.accessioned |
2024-08-06T05:59:46Z |
|
dc.date.available |
2024-08-06T05:59:46Z |
|
dc.date.issued |
2023 |
|
dc.identifier.citation |
FAC 1248 |
en_US |
dc.identifier.uri |
http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15468 |
|
dc.description.abstract |
பிரதிநிதித்துவ ஜனநாயக சூழலில் வாக்காளர் நடத்தை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது. அதன்படி வாக்காளர் நடத்தை தொடர்பாக விளங்கிக் கொள்ள வேண்டியது அவசியமானதாக அமைகின்றது. பொதுவாக வாக்காளர் நடத்தையில் அரசியல், பொருளாதார, சமூக காரணிகள் செல்வாக்கு செலுத்தி நிற்கின்றன. இக்காரணிகளின் செல்வாக்கானது வாக்காளர் நடத்தையில் தாக்கத்தை செலுத்துகின்ற ஒரு விடயமாக காணப்படுவதனை அவதானிக்க முடிகின்றது. இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தமானது அக்காலத்தில் வாக்காளர் நடத்தையில் பல பாதிப்புகளை ஏற்படுத்தி இருந்தது என்பதுடன் வாக்காளர்கள் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலையும் காணப்பட்டது. எனவே யுத்தம் முடிவடைந்த பின்னர் சுதந்திரமான வகையில் வாக்காளர்கள் செயற்படக்கூடிய சூழ்நிலைகள் காணப்பட்டாலும் உண்மையில் பெரும்பாலான வாக்காளர்கள் தமது சுய முடிவின் அடிப்படையில் செயற்படுவதற்கு பல காரணிகள் தடையாக அமைந்துள்ளது. அந்தவகையில் இலங்கையில் 22 மாவட்டங்களில் தேர்தல் ஒன்றாக காணப்படும் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் யுத்தத்திற்கு பின்னரான காலத்தில் வாக்காளர் நடத்தையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. மாற்றங்களின் பிரதிபலிப்புகள் யுத்தத்திற்கு பின்னரான பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் ஊடாக வெளிக்காட்டக் கூடியதாக அமைகின்றது. இதன் மூலமாக மாவட்டத்தில் காணப்படும் சிறுபான்மை கட்சிகள் தங்களுடைய பிரதிநிதித்துவத்தை இழக்கின்ற நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே யுத்தமற்ற சூழல் வாக்காளரின் சுதந்திரமான செயற்பாடுகளில் செல்வாக்கு செலுத்தி அவர்களுடைய நடத்தையில் சுதந்திரமாக செயல்படுவதற்கான வழியினை ஏற்படுத்தியுள்ளது. எனவே இவ் ஆய்வானது பாராளுமன்ற தேர்தலும் வாக்காளர் நடத்தையும் யுத்தத்திற்கு பின்னரான மட்டக்களப்பு மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்ட
ஆய்வு என்ற தலைப்பினைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. |
en_US |
dc.language.iso |
other |
en_US |
dc.publisher |
Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka |
en_US |
dc.subject |
பாராளுமன்ற தேர்தல் |
en_US |
dc.subject |
வாக்காளர் நடத்தை |
en_US |
dc.subject |
யுத்தம் |
en_US |
dc.subject |
மட்டக்களப்பு மாவட்டம் |
en_US |
dc.title |
பாராளுமன்ற தேர்தலும் வாக்காளர் நடத்தையும்: யுத்தத்திற்கு பின்னரான மட்டக்களப்பு மாவட்டத்தை அடிப்படையாக கொண்ட ஆய்வு |
en_US |
dc.type |
Thesis |
en_US |