Abstract:
இலங்கையில் மலையக மக்களும் மலையக மக்களின் அரசியல் வரலாறும் தனித்துவமான பன்பை கொண்டவனாகும். பிரித்தானிய வருகையோடு இலங்கை மலை பிரதேசங்களில் குடியமர்த்தப்பட்ட மலையக மக்கள் பல்வேறு ஒடுக்கு முறைகளுக்கும் உரிமை மீறலுக்கும் உள்ளாக்கப்பட்டனர். இதிலிருந்து விடுபடுவதற்காக மக்கள் தங்களை அமைப்பு ரீதியாக ஒழுங்கமைத்து போராட ஆரம்பித்தனர். அந்த காலப்பகுதியிலே மலையக மக்களின் அரசியல் வரலாறு என்பது ஆரம்பமாகியது. இவ்வாறு அரசியல் ரீதியாக வளர்ச்சி அடைந்த மலையக மக்கள் இன்று 200 வருட கால அரசியல் வரலாற்றை பின்னணியாக கொண்டுள்ளனர்.இக் காலப்பகுதிகளில் மலையகத்திற்கு தலைமை தாங்கிய ஆளுமை மிக்க அரசியல் தலைமைகளின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். ஒரு நாடு அல்லது சமூகம் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டுமாயின் அதற்கு தலைமை தாங்கும் அரசியல் தலைமைகளின் வகிபங்கு அவசியமானதாகும். அந்த வகையில் மலையக அரசியல் வரலாற்றில் மலையக மக்களுக்காக பல உரிமைகளை பெற்றுக் கொடுத்த மலையக மக்களின் விடிவெள்ளியாக இன்றும் போற்றப்படும் சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரனாக 1990களில் அரசியலில் பிரவேசித்து 30 வருட காலமாக மலையக மக்களின் அரசியல் வளர்ச்சிக்காக பங்களிப்பை மேற்கொண்ட ஆறுமுகத்தன்மை அரசியல் ஆளுமையை ஆய்வு செய்வது நோக்கமாகக் கொண்டு இவ் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.குறிப்பாக மலையகத்தில் ஆறுமுகத்தொண்டமானின் அரசியல் ஆளுமையினால் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களும் மலையகத்தின் அரசியல் வளர்ச்சிக்கு அவராற்றிய பணிகள் இன்று மலையக அரசியல் ஆறுமுகன்தொண்டமானின் இழப்பு மலைக மக்களிடம் அரசியல் ஏற்படுத்தி உள்ள தாக்கம் அத்தோடு தொண்டமானின் ஆளுமை தொடர்பான ஒரு மதிப்பீடு என்பவற்றை ஆய்வு செய்வது அதனூடாக பெறப்பட்ட முடிவுகளினூடாக மலையக அரசியலில் எதிர்காலத்தில் சிறந்த ஆளுமைமிக்க தலைமைகளை உருவாக்கும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இவ்
ஆய்வு அமைந்துள்ளது.