Abstract:
பல இன, மத, மொழிபேசும் மக்கள் வாழ்கின்ற இலங்கையில் இனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வும் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கமும் மிக முக்கியமான ஒன்றாகும். இன நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கு முயற்சித்தாலும், மதரீதியாகக் குறித்த பிரதேசத்தில் வாழுகின்ற சிறுபான்மை இனத்தவர்களுக்கும் பெரும்பான்மை இனத்தவர்களுக்கும் இடையில் முரண்பாடானது தவிர்க்க முடியாத ஒன்றாக காணப்படுகின்றது. ஐரோப்பிய ஆட்சி காலத்தில் ஓரளவுக்குச் சிறந்து விளங்கிய இன நல்லூரமானது இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் உள்நாட்டில் ஏற்பட்ட மதரீதியான முரண்பாடுகள் காரணமாக இனங்களுக்கு இடையிலான உறவு பாதிப்புற்று வன்முறைகள் தோன்றுவதற்கு காரணமாக அமைந்திருந்தது.
இருந்த போதிலும் இனங்களுக்கு இடையிலான நல்லுறவினை கட்டி எழுப்பக்கூடிய வகையிலான பல்வேறு முன்னெடுப்புகளும் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும், இலங்கையில் இடம் பெற்ற உள்நாட்டு யுத்த காலத்தில் இனங்களுக்கு இடையில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான சரியான தீர்வு இன்னும் கிடைக்கப் பெறவில்லை, இதன் அடிப்படையில் குறித்த எனது ஆயுதப்பிரதேசத்தில் காணப்படுகின்ற மத வாத சிந்தனைகளானது இனங்களுக்கிடையிலான உறவினை எவ்வாறு ஆரம்ப காலம் தொடக்கம் இன்று வரை பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றது.
இவ் அடிப்படையில் அரசியல் விஞ்ஞானத் துறையில் சிறப்பு கற்கையின் ஒரு பகுதியைப் பூர்த்தி செய்யும் முகமாக "மதவாத சிந்தனை மாற்றமும் பொத்துவில் பிரதேச இனப்பரம்பலும் ஓர் அரசியல் வரலாற்று ஆய்வு" என்னும் தலைப்பில் இவ்வாய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.