dc.description.abstract |
உலகமயமாக்கல் தற்காலத்தில் தேசிய அரசு முறையினை மாற்றத்திற்குள்ளாக்கியுள்ள செயற்பாடானது, சோவியத் யூனியனின் உடைவிற்குப் பின்னர் தோற்றம் பெற்றது. இதன் மூலமாக உலக அதிகார மையத்தினை அமேரிக்கா தலைமை தாங்க ஆரம்பித்தது. இதனால் உலகின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தி நன்மையடைய உலகமயமாதல் எனும் செயற்பாட்டை தனக்கு சாதமாக்கியது. இதன் மூலம் இலங்கை போன்ற சிறிய மூன்றாம் மண்டல நாடுகளைப் பயன்படுத்தி தமது வல்லரசு நிலையினை அடைய அந்நாடுகளின் எல்லா செயற்பாட்டுகளிலும் தலையிட்டது.
இதன் மூலமாக உலகமயமாதல் எனும் செயற்பாட்டின் ஊடாக சமூக, கலாசார, பண்பாடு கல்வி என எல்லாவற்றிலும் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு உலகமயமாதல் பல்தேசியக்கம்பனிகளாலும், அரசுசார் மற்றும் அரசுசாரா நிறுவனங்களாலும் பலதாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் இலங்கையின் அரசியல் முறைமையில் பூகோளமயமாக்கல் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, இவ் ஆய்வு கருத்துக்கள் "உலகமயமாக்கலும் இலங்கையின் அரசியல் முறைமையும்" எனும் ஆய்வின் ஊடாக கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது |
en_US |