மாக்கிசச் சிந்தனைகளின் இருப்பும், நிக்காலோ மாக்கியவல்லியின் அரசியல் சிந்தனைகளும். ( நிக்காலோ மாக்கியவல்லியின் இளவரசன் நூலை அடிப்படையாய்க் கொண்ட ஆய்வு

Show simple item record

dc.contributor.author கபிலன், இரகுநாதன்
dc.date.accessioned 2024-08-06T09:39:18Z
dc.date.available 2024-08-06T09:39:18Z
dc.date.issued 2023
dc.identifier.citation FAC 1258 en_US
dc.identifier.uri http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15478
dc.description.abstract இன்றைய அரசியலில் சூழலில் பல்வேறுபட்ட சிக்கல்கள் காணப்படுகின்றது. அதனை எமது அரசியல் மெய்யியலுாடாக ஆராய வேண்டியது மெய்யியல் மாணவர்களாகிய எமது தலையாய கடமையாகும். இதனையே மேற்கொள்கின்றது. அந்தவகையில், நிக்காலோ அரசியல் மெய்யியலானது மாக்கியவல்லியின் அரசியல் சித்தாந்தங்கள் ஒரு ஆட்சியாளன் மக்களுக்கு நன்மையளிக்கக்கூடிய வகையிலும் தனது ஆட்சியதிகாரத்திற்கு எந்தவித களங்கமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற வகையிலும் எவ்வாறு தன்னுடைய ஆட்சியை நிலைநிறுத்திக் கொள்ளமுடியும்? எனத் தன்னுடைய "இளவரசன்" என்ற நூலில் சுட்டிக்காட்டியுள்ளார். மாக்கியவல்லி ஒரு சிறந்த ஜனநாயக ரீதியான முடியாட்சியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த நுாலை எழுதியிருந்தாலும், தற்கால ஆட்சியாளர்கள் மக்களுக்கு ஜனநாயகத்தை எட்டாக்கனியாக வைத்திருக்க இந்த இளவரசன் என்ற நூலைப் பயன்படுத்துகின்றார்கள் என்பது கவலைக்குரிய விடயமாகும். அதிலும் குறிப்பாகப் பொருளாதாரச் சமத்துவத்தை முதன்முதலாக உலகிற்குக் கொண்டு வந்த கார்ள்மார்க்சின் தத்துவமான மாக்சியக் கோட்பாட்டைக் கொண்டு மக்களை ஆள நினைக்கும் கம்யூனிசவாதிகள் பலர் மாக்சியக் கோட்பாட்டைக் கையில் எடுத்து மக்களைச் சர்வாதிகாரமாக அடக்கியொடுக்குகின்றார்கள். இந்த ஆய்வைப்பற்றி நான் சுருக்கமாகச் சொல்லப்போனால், மாக்சிசத்தைக் கொண்டு நாட்டை ஆளும் கம்யூனிசவாதிகள் எவ்வாறு மாக்கியவல்லியின் சித்தாந்தங்களைக் கொண்டு மக்களை மிதித்து தங்கள் ஆட்சியை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்கள் எனக் கூறி அவர்களின் கம்யூனிசவாதிகள் என்ற முகத்திரையைக் கிழித்து அவர்களின் உண்மை முகம் மாக்கியவல்லியின் சர்வாதிகார அரசியலே என்பதை நான் நிரூபிக்க முயல்கின்றேன். முதலாளித்துவ நாடுகளில் பணம் கொட்டிக் கிடக்கும் முதலாளிகள் தான் சர்வாதிகாரிகள் என்பது போல் கம்யூனிச நாடுகளில் அரசாட்சி நடாத்தும் தலைவர்கள் தான் சர்வாதிகாரிகள் ஆகும். எனவே மக்கள் ஒட்டுமொத்தமாகச் சமமான அங்கீகாரத்துடன் வாழ்வதற்கு கார்ள்மார்க்ஸ் விட்டுச் சென்ற மாக்சியத்தை ஜோசப் ஸ்டாலின், விளாடிமீர் புடின், கிம் ஜான் உன் முதலிய கம்யூனிச ஆட்சியாளர்கள் மாக்சியத்தை மாக்கியவல்லியோடு தேவையற்ற விதத்தில் சேர்த்துக் கொண்டு அரசாட்சி நடாத்துவதை நான் இந்த ஆய்வில் அரசியல் மெய்யியல் ரீதியாக ஆராய்கின்றேன். en_US
dc.language.iso other en_US
dc.publisher Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka en_US
dc.subject மாக்கிசச் சிந்தனைகள் en_US
dc.subject நிக்காலோ மாக்கியவல்லி en_US
dc.subject அரசியல் சிந்தனைகள் en_US
dc.subject இளவரசன் நூல் en_US
dc.title மாக்கிசச் சிந்தனைகளின் இருப்பும், நிக்காலோ மாக்கியவல்லியின் அரசியல் சிந்தனைகளும். ( நிக்காலோ மாக்கியவல்லியின் இளவரசன் நூலை அடிப்படையாய்க் கொண்ட ஆய்வு en_US
dc.type Thesis en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search


Browse

My Account