dc.contributor.author | றொசாயினி, நித்திஞானம் | |
dc.date.accessioned | 2024-08-06T09:45:07Z | |
dc.date.available | 2024-08-06T09:45:07Z | |
dc.date.issued | 2023 | |
dc.identifier.citation | FAC 1259 | en_US |
dc.identifier.uri | http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15479 | |
dc.description.abstract | இந்த உலகில் மனிதராய் பிறந்த அனைவரும் வாழ்தல் பொருட்டு பல்வேறு ஒழுக்க பண்புகளையும் நடைமுறைகளையும் கடைபிடிக்க வேண்டியவர்களாக காணப்படுகின்றோம். ஒரு மனிதன் சமூகத்தில் உயர்ந்த நிலையில் மதிப்பிட வேண்டுமாயின் அவன் சுயஒழுக்கம் உடையவனாகவும் நற்பண்புகளை பின்பற்றுவனாகவும் இருக்க வேண்டும். ஆதிகாலம் தொடக்கம் இன்று வரை நல்லொழுக்கமானது ஒரு மனிதனின் உயர்பண்பாக கருதப்படுகின்றது. நல்லொழுக்கம் எனப்படுவது மனிதர்களை நல்வழிப்படுத்தும் சிறந்த ஆயுதமாகவும் காணப்படுகின்றது, அந்த வகையில் மகாபாரதம் வெளிப்படுத்தும் வாழ்வியல் தத்துவம் ஒழுக்கவியல் அடிப்படையிலான ஒரு ஆய்வு எனும் தலைப்பின் ஒழுக்கவியலின் பின்னணியை தெளிவுபடுத்துவதாகவும் பிரதான இலக்கியங்களில் காணப்படும் ஒழுக்க விழுமியங்களை ஆராய்வதாகவும் மேலும் பகவத் கீதையின் ஒழுக்க விடயங்களை கூறுவதாகவும் தற்கால வாழ்க்கையில் ஒழுக்கப் பிரயோகங்களை விளக்குதல் போன்ற பல்வேறு விடயங்களை நோக்கமாகக் கொண்டு இந்த ஆய்வு காணப்படுகிறது. இவ்வாய்வு இலக்கியத்தில் காணப்படும் கோட்பாட்டு விடயங்களை பகுப்பாய்வு செய்வதனால் இது விபரிப்பு ஆய்வாகவே இருக்கும். இதனால் பண்புசார் ஆய்வு முறை இங்கே பிரயோகிக்கப்படுகின்றது. இந்த ஆய்வினை மேற்கொள்வதற்கு இரண்டாம் தராதர மூலங்களும் மூன்றாம் தராதர மூலங்களும் பயன்படுத்தப்படுகின்றன. பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஆய்வுக்குரிய விடயம் பண்புசார் அடிப்படையில் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு முடிவு காணப்படுகின்றது. மனிதன் தனக்கென காணப்படும் வாழ்வியல் ஒழுக்கத்திலிருந்து மீறாது அவ்வொழுக்கத்தினை பேணுவதன் மூலம் சமூகத்தில் பல்வேறு விதமான சமூக சீர்கேடுகளிலிருந்தும் பிரச்சினைகளிலிருந்தும் மீளக்கூடியதாக காணப்படும். அந்த வகையில் மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் ஒழுக்க சிந்தனைகள் குறித்த இவ்வாய்வு ஒரு மனிதனின் நல்வாழ்க்கைக்கு உகந்ததாகவே காணப்படுகின்றது. | en_US |
dc.language.iso | other | en_US |
dc.publisher | Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka | en_US |
dc.subject | ஒழுக்கம் | en_US |
dc.subject | மகாபாரதம் | en_US |
dc.subject | தர்மம் | en_US |
dc.subject | கர்மம் | en_US |
dc.title | மகாபாரதம் வெளிப்படுத்தும் வாழ்வியல் தத்துவம் - ஒழுக்கவியல் அடிப்படையிலான ஒரு ஆய்வு | en_US |
dc.type | Thesis | en_US |