Abstract:
மனிதனுடைய அத்தியாவசியமான தேவைகளில் ஒன்றாக காணப்படுவது பொருளாதாரம் ஆகும் இந்த பொருளாதாரத்தின் மூலம் நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியும் அதே நேரம் அதே அளவான தீமைகளையும் பெற்றுக் கொள்ள முடியும் இந்த பொருளாதாரமானது சமகாலத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக பொருளாதாரம் இலங்கையில் பாரிய வீழ்ச்சியை நோக்கி காணப்பட்டது. இந்த வீழ்ச்சியின் காரணமாக பல மக்கள் வாழ்வாதாரத்தினையும் அதே நேரம் உயிரினையும் பலர் இழந்துள்ளனர் அதையும் தாண்டி பல வகையான மக்கள் பொருளாதார நெருக்கடியினால் உளதாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். அந்த வகையில் இந்த பொருளாதார நெருக்கடியால் சிறுவர்கள் தொடக்கம் மாணவர்கள் பெரியோர்கள் அரசியல்வாதிகள் என அனைவருமே இந்த பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் சமூகத்தில் தொழில்களை புரிந்து கொண்டு உழைத்து வாழ்பவர்களுக்கு பொருளாதார நெருக்கடி ஒரு சிக்கலான சூழ்நிலையாகவும் இந்த பொருளாதார நெருக்கடி அவர்களுக்கு உழைப்பாதிப்பை தருகின்றது எனின் எவ்விதமான தொழிலுக்கும் செல்லாமல் இலங்கையின் பல மாவட்டங்களில் இருந்து வருகை தந்து கல்விகளை புரிந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு பல்கலைக்கழக மாணவர்களின் நிலை என்ன என்பது பற்றியதாக இந்த ஆய்வு காணப்படுகின்றது. அவர்கள் எவ்வாறான உளப்பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்கள் என்பதையும் ஆய்வு செய்கின்றது.
அந்த வகையில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் காணப்படுகின்ற விடுதியில் தங்கினின்று கல்வி பயிலும் இரு அரையாண்டு மாணவர்களை எடுத்து அவர்களில் இருந்து எழுமாற்றாக 100 மாணவர்களை எடுத்து அவர்களிடம் சில வகையான வினாக்கத்து முறைகளிலும் நேர்காணல் முறையிலும் அவதானத்தின் மூலமும் மாணவர்கள் இந்த பொருளாதார நெருக்கடி காரணமாக எவ்வகையான நெருக்கடிகளை எதிர்கொள்கின்றார்கள் என்றும் அந்த பொருளாதார நெருக்கடியினால் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள் என்ன என்பது பற்றியும் ஆய்வு செய்கின்றது. மேலும் இந்தப் பொருளாதார பிரச்சனையானது வெளியில் காணப்படுகின்ற உயர்ந்த மனிதர்கள் கூட மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்றால் மாணவர்கள் எந்த அளவுக்கு உளரீதியாக பாதிப்படைந்துள்ளார்கள் என்பதனை கண்டறிவது இந்த ஆய்வின் முக்கியமான விடயமாக காணப்படுகின்றது.
அந்த வகையில் இந்த பிரச்சினைக்கு என்ன காரணம் என்பதனையும் விளக்குவதாக இது காணப்படுகின்றது. இந்த ஆய்வானது ஆய்வு செய்வதோடு மட்டும் விட்டு விடாமல் இந்த பிரச்சனைக்கான தீர்வுகளையும் ஓரளவு வழங்குகின்ற ஒன்றாகவே இந்த ஆய்வு முறை அமைந்து காணப்படுகின்றது. ஆனால் இவ்வாய்வில் கேட்கப்படுகின்ற கேள்விகள் மாணவர்களின் மனதை பாவிக்காத வண்ணமும் அவர்கள் கூறுகின்ற கருத்துக்களை எவருக்கும் வெளிப்படுத்தாமலும் ஆய்வு செய்கின்ற ஒன்றாக இந்த ஆய்வு முறை அமைந்து காணப்படுகின்றது.
“இலங்கையில் சமகால பொருளாதார நெருக்கடியால் பல்கலைக்கழக மாணவர்கள் எதிகொள்ளும் உளரீதியான தாக்கங்கள்" தொடர்பான ஆய்வினை கிழக்குப் பல்கலைக்கழக விடுதி மாணவர்களை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு அமைந்து காணப்படுகின்றது. இந்த ஆய்வானது இப் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்களின் உளநிலை எப்படி காணப்பட்டது. அந்த நெருக்கடியை எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பதனையும் எடுத்துக்காட்டுவதாக இந்த ஆய்வு அமைந்து காணப்படுகின்றது. அந்த வகையில் இந்த ஆய்வானது ஐந்து அத்தியாயங்களை கொண்டதாக காணப்படுகின்றது. அந்த வகையில் முதலாம் அத்தியாயம் ஆனது ஆய்வு அறிமுகம், ஆய்வு பிரச்சனை, ஆய்வின் முக்கியத்துவம், ஆய்வின் நோக்கம், ஆய்வு கருதுகோள், ஆய்வு வினாக்கள், ஆய்வு முறையில் என்பவற்றை விளக்குவதாக காணப்படுகின்றது.
அடுத்து இவ்வாயின் இரண்டாம் அத்தியாயம் ஆனது ஆய்வுப் பிரதேசம் பற்றிய ஒன்றாக காணப்படுகின்றது. இதில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள் மற்றும் பல்கலைக்கழகத்தினுடைய பிரதேச கட்டமைப்பு மற்றும் பல்கலைக்கழகத்தில் காணப்படுகின்ற கற்கை நெறிகள் என்பவை பற்றியும் விளக்குகின்றது. அத்தோடு பொருளாதாரம் பற்றியும் விளக்குகின்றது அந்த வகையில் இந்த பொருளாதாரமானது 1980 தொடக்கம் 1975 வரையான காலப்பகுதியில் எவ்வாறு காணப்பட்டது என்பது பற்றியும் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்த காரணிகள் எவை எனவும் முன்னைய காலத்தில் குறிப்பாக சுதந்திரம் பெற்ற பின் பொருளாதார முன்னேற்றம் எவ்வாறு அமைந்து காணப்பட்டது எனவும் தற்காலத்தில் எவ்வாறு காணப்படுகின்றது.
இந்த பொருளாதாரத்தினால் ஏற்படுகின்ற பொருளாதார நெருக்கடி தொடர்பாகவும் இந்த நெருக்கடிகள் எவ்வாறான சூழ்நிலைகளினால் ஏற்படுகின்றன அதாவது நெருக்கடிக்காண காரணங்கள் எவை என்பதனையும் விளக்கிக் காட்டுகின்றது அதையும் தாண்டி இந்த பொருளாதார நெருக்கடியானது நாட்டில் எவ்வகையான வீழ்ச்சி நிலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பதனையும் விளக்குவதாகவே இந்த அத்தியாயம் காணப்படுகின்றது.
மூன்றாம் அத்தியாயம் ஆனது உளவியலுடன் தொடர்புபட்டதா காணப்படுகின்றது. காரணம் ஆய்வானது மாணவர்களுடைய உளநிலையுடன் தொடர்புடைய காணப்படுவதனால் உளவியல் தொடர்பான விடையங்களை மூன்றாம் அத்தியாயம் கொண்டுள்ளது. அந்த வகையில் உளவியலின் அறிமுகம். உளவியலின் வகைகள், மற்றும் உளவியலின் மூலம் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றியும் இந்த உளவியல் ஆனது எவ்வகையில் மாணவர்கள் மீது தாக்கத்தை செலுத்துகின்றது எனவும் பொருளாதார நெருக்கடியால் இந்த உளவியல் எவ்வகையில் காணப்பட்டது. பொருளாதார நெருக்கடி காரணமாக இவ் உளவியல் மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம் பற்றியும் இதனால் மாணவர்கள் எதிர்கொண்ட உளவியல் பிரச்சனைகளை ஆய்வு செய்கின்ற ஒன்றாகவே இந்த அத்தியாயம் காணப்படுகின்றது
இவ்வாய்வினுடைய பிரதான அத்தியாயமாக நான்காம் அத்தியாயம் காணப்படுகின்றது. அத்தியாயத்தில் ஆய்வு பிரதேசத்தில் மேற்கொண்ட வினாக்கொத்து முறை, நேர்காணல், அவதானம் என்பவற்றின் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகளினை பகுப்பாய்வு செய்து அதில் உள்ள விடயங்களை சுருக்கமாக குறிப்பிட்ட ஒன்றாகவே இந்த அத்தியாயம் காணப்படுகின்றது. இவ் அத்தியாயத்தின் ஊடாக குறித்த ஆய்வு பிரதேசத்தில் காணப்பட்ட மாணவர்களுடைய உள ரீதியான பாதிப்புகளை அவர்கள் எதிர்கொண்ட உளவியல் ரீதியான பிரச்சனைகளையும் பகுபாய்வு செய்து பொருத்தமான வரைபடங்கள் மற்றும் அட்டவணைகள் மூலம் விளக்கிக் காட்டுகின்ற ஒன்றாகவே நான்காம் அத்தியாயம் காணப்படுகின்றது. இந்த அத்தியாயத்தில் பல்கலைக்கழகத்தில் விடுதி மாணவர்கள் எவ்வகையான பிரச்சனைகள் எதிர்கொண்டுள்ளார்கள் என்பதையும் பல்கலைக்கழகத்தில் எவ்வகையான பிரச்சினைகள் காணப்படுகின்றது என்பது பற்றியும் அத்தியாயம் விளக்குகின்றது.
இறுதி அத்தியாயம் ஆன ஐந்தாம் அத்தியாயமானது அறிமுகம், தொகுப்புரை, முடிவுரை
மற்றும் பரிந்துரைகள் என்பவற்றினைக் கொண்டதாகவும் அதே நேரம் பெற்றுக்கொள்ளப்பட்ட
ஆய்வின் முடிவுகள் தொடர்பான கருதுகோள் வாய்ப்புபார்த்தல் மற்றும் முடிவுரையினைக்
கொண்டதாக இவ் அத்தியாயம் காணப்படுகின்றது. அந்த வகையில் இந்த ஒழுங்கின்
அப்படையில்தான் என்னுடைய இந்த உளவியல் பற்றிய ஆய்வு அமைந்து காணப்படுகின்றது