Abstract:
"சமூகநலவழிப்படுத்தலில் உளவளத்துணையின் வகிபாகம் மெய்யியல்சார் உளவளத்துணை நோக்கு எனும் தலைப்பை மையமாகக்கொண்டு இவ்வாய்வானது அமைந்துள்ளது. இவ்வாய்வினை மேற்கொள்வதற்காக முதலாம் நிலைத்தரவு மற்றும் இரண்டாம்நிலைத் தரவுகள் என்பன பயன்படுத்தப்பட்டன. முதலாம் நிலைத்தரவாக நேர்காணல் மற்றும் கலந்துரையாடல் என்பனவும், இரண்டாம்நிலைத் தரவுகளாக நூல்கள், சஞ்சிகைகள், ஆய்வுக்கட்டுரைகள், இணையத்தளங்கள், என்பன ஆய்விற்குப் பயன்படுத்தப்பட்டு தரவுகள் பெறப்பட்டுள்ளன.
மெய்யியல் பற்றியும், அதன் பகுதியினுள் உள்ளடங்குகின்ற உளவியல் பற்றியும், உளவியலின் பிரிவினுள் ஒன்றான பிரயோக உளவியலாகக் கருதப்படும் உளவளத்துணை பற்றியும், அதன் வரலாற்றுப் பிண்ணனி பற்றியும், அதன் வகைகளான தனிநபர், குழு மற்றும் குடும்ப உளவளத்துணை பற்றியும், உளவளத்துணை அணுகுமுறை பற்றியும், உளவளத்துணை படிமுறைகள் பற்றியும், மேலும், சமூகங்கள், அதன் சிறப்பியல்புகள், அதன் கூறுகள் மற்றும் அதன் ஆரம்ப காலம் முதல் தற்காலம்வரை தோற்றம்பெற்ற சமூகங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தற்காலத்தில் சமூகத்தில் தனிநபர் என்ற வகையில், சிறுவர்கள், முதியோர்கள், இளைஞர்கள், மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும், அதற்கான உளவளத்துணை வழிகாட்டல்களையும் உள்ளடக்கியதாகவுள்ளது. இவ்வாறான பிரச்சினைகளை உளவளத்துணை குறைப்பதுமாகவுள்ளது. அத்துடன் தற்காலத்தில் நிகழும் சமூகப்பிரச்சினைகளையும், இதனால் சமூகத்தில் நிலவும் சீர்குலைவினையும், இதற்காக உளவளத்துணையின் பங்கினையும், எதிர்காலத்தின் வாழ்வினுடைய நிலையாமையையும், இதுவரை அறியப்படாத விடயங்களை விழிப்புணர்வின்மூலம் அறியச்செய்வதுமே இவ்வாய்வாக அமைகிறது.