dc.description.abstract |
பெண்ணியல் சிந்தனை இன்று உலகில் தவிக்க முடியாத சிந்தனைத்துறையின் எல்லா அம்சங்களிலும் ஆளுமை செலுத்துகின்ற ஒரு துறையாகவே வளர்ச்சி அடைந்துள்ளது. அரசியல், பண்பாடு, மொழியியல், சமூகவியல், பொருளியல், மற்றும் அறிவியல் உள்ளிட்ட அனைத்துத்துறைகளிலும் பெண்ணிலைச்சிந்தனையின் பரிமாணம் வெகுவாக உணரப்படுகின்ற அதேவேளை இச்சிந்தனை இன்று இதன் இலக்கை நோக்கி விரைவாக முன்னேறி வருகிறது. பெண்ணியம், பெண்விடுதலை போன்ற சொற்றொடர்கள் இன்று ஆய்வுலகின் பிரதான இடத்தை பெற்றுள்ளது. பெண்ணியம் என்பது பெண்களின் சமூக நிலையை உயர்த்துவதை நோக்காகக் கொண்ட ஒரு கருத்தியலாகும். இந்தவகையினில் பெண்ணியக் கருத்தியலில் பிரதான எண்ணக்கருக்களுள் "பெண்களும் வன்முறையும்" என்னும் விடயம் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட விடயமாகும். மேலும் இவ்விடயம் ஒரு தேசிய சர்வதேச கவனத்திற்குரிய பிரச்சினையாக மாறியுள்ளது. அந்தவயிைலே பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகள், பெண்களின் உரிமைகளை பறித்தல், அவர்களைத் துன்புறுத்துதல் மற்றும் அனைத்து விதமான சூழ்நிலைகள் தொடர்பாகவும் புகார்களை பெறுவதற்கும். உதவிகள் மற்றும் நிவாரணங்களை வழங்குவதற்குமான நோக்கங்களுடன் எமது நாட்டில் அரச மற்றும் அரச சார்பற்ற பெண்கள் அமைப்புக்கள் நிறுவப்பட்டன. இவ்வாறு கிழக்கிலங்கையில் உள்ள மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேசத்தில் பெண்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்காகவும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கெதிரான அனைத்து விதமான வன்முறைகளையும் ஒழிக்கும் முகமாகவும் வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டெடுத்து வன்முறையற்ற பெண் சமுதாயத்தை உருவாக்க பணியாற்றும் பெண் ஆர்வலர்கள் மற்றும் பெண்ணியவாதிகளினால் உருவாக்கப்பட்ட அரச சார்பற்ற பிரதான பெண்கள் அமைப்பாக சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் பல வருடகாலமாக இயங்கி வருகின்றது. இப்பெண்ணிய அமைப்பானது வன்முறைகளற்ற பெண் சமுதாயத்தை உருவாக்குவதில் எத்தகைய பங்கினை வகிக்கின்றது என்பது ஒரு பெண்ணிய மெய்யியல் நோக்கோடு ஆராயப்படுகின்றது. ஆய்வின் நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக முதனிலை மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகள் சேகரிக்கப்பட்டு, நோக்க பூர்த்திக்கேற்ப பொருத்தமான அளவைசார் மற்றும் பண்புசார் நுட்பமுறைகளின் மூலமாக பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தரவு பகுப்பாய்விற்காக Excel, GIS போன்ற மென்பொதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் கிடைக்கப்பெற்ற முடிவுகள் வரைபுகள், அட்டவணைகள், படங்கள், விபரிப்புக்கள், விளக்கங்கள் போன்றவற்றினூடாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. ஆய்வின் இறுதியில் சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் வன்முறைகளற்ற பெண்கள் சமுதாயத்தை உருவாக்குவதிலும்
பெண்களின் நலன்களை பேணுவதிலும் காத்திரமான பங்களிப்புகளை வழங்குகின்றது என
முன்வைக்கப்பட்ட கருதுகோள் பரிசீலனை செய்யப்படுகின்றது. |
en_US |