dc.description.abstract |
மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை அவனது வாழ்க்கையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இந்த நிகழ்வுகள் யாவும் எதாவது ஒரு காரணத்தின் அடிப்படையிலேயே நிகழ்கின்றது. அதாவது இவ்வுலகில் நடைபெறுகின்ற எந்த ஒரு செயலும் காரணம் இல்லாமல் நடைபெறுவது இல்லை என்று கபிலர் கூறுகின்றார். இங்கு ஒவ்வொரு செயலுக்குள்ளும், ஒவ்வொரு பொருளுக்குள்ளும் அடுத்த காரியத்திற்கான காரணங்கள் மறைந்திருப்பதாகவும் அதனை உதாரணங்களுடன் நிரூபிக்க வேண்டும் என்ற விளக்கத்தையும் முன்வைக்கின்றார். இந்த வகையிலே ஒரு காரணம் இல்லாமல் ஒரு செயல் நடைபெறாது எனக் கூறுவதே காரணகாரிய வாதம் ஆகும். அதாவது எந்த ஒரு செயலுக்கும் பின் புலமாக ஒரு காரணம் இருக்கும். இந்த காரணகாரிய வாதமானது தற்காலத்தில் அனைத்து துறைகளிலும் செல்வாக்கு செலுத்துகின்றது.
இதனடிப்படையில் சாங்கியத்தில் கூறப்படுகின்ற காரணகாரிய வாதத்தை சாங்கிய தத்துவகௌமுதி என்ற கடலங்குடி நடேச சாஸ்திரிகளால் இயற்றப்பட்ட நூலை அடிப்படையாக கொண்டு பகுப்பாய்வு செய்வதாக இந்த ஆய்வு அமைகிறது. இந்த ஆய்வானது காரணகாரிய வாதம் பற்றியும் அது ஏனைய துறைகளில் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகின்றது என்பது பற்றியும் கூறுவதுடன் சாங்கிய தத்துவத்தில் அதன் செல்வாக்கு பற்றியும் எடுத்துக்காட்டுவதுடன் சாங்கிய தத்துவ கௌமுதியிலும் காரணகாரிய வாதம் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது. அத்துடன் இவை இரண்டுக்கும் இடையிலான ஒற்றுமை, வேற்றுமை இறுதியில் இரண்டும் நன்கு பகுத்தாரயப்பட்டு முடிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எந்தவொரு ஆய்வினையும் சிறப்புற மேற்கொள்வதற்கு ஆய்வுப் பிரச்சினை அடிப்படையானதே அந்த வகையில் இவ்வாய்வின் பிரச்சினைக்குரிய பதிலும் தெட்டத் தெளிவாக முன்னைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆய்வு குறித்து முன்வைக்கப்பட்டுள்ள வினாக்களிற்கு உரிய இலக்கை அடைந்த தன்மையை தெட்டத் தெளிவாகப் புலனாகின்றது. இவ்வாய்வானது பண்பு ரீதியாகக் காணப்படுவதுடன் இங்கு இரண்டாம் நிலைத் தரவுகளான நூல்கள், சஞ்சிகைகள், பத்திரைகள் மற்றும் கட்டுரைகள் என்பவற்றின் மூலமும், மூன்றாம் நிலைத் தரவுகளான இணையவழித் தரவு திரட்டல் முறையின் மூலமும் கிடைக்கப் பெற்ற தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மாத்திரமே இவ்வாய்வு மேற் கொள்ளப்பட்டுள்ளது. |
en_US |