dc.contributor.author |
தவேநிதா, தேவதாஸ் |
|
dc.date.accessioned |
2024-08-06T10:41:21Z |
|
dc.date.available |
2024-08-06T10:41:21Z |
|
dc.date.issued |
2023 |
|
dc.identifier.citation |
FAC 1267 |
en_US |
dc.identifier.uri |
http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15487 |
|
dc.description.abstract |
நவநாகரிக யுகத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பமானது துரிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது. இது ஒரு புறம் இருக்க மறுபுறம் இணையப் பாவனையானது சமூகத்தின் மத்தியில் இன்றியமையாததாக காணப்படுகின்றது. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தினை இணையத்தின் வாயிலாக பாவனையை செய்கின்ற போது ஏற்படுகின்ற ஒரு பெரும் பாதகமான விளைவாகவே இணையவழி குற்றங்கள் திகழ்கின்றன. இணையவழி குற்றங்களினால் சமூகத்தில் தரப்பினர்களும் பல வகையான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். பல
புதிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள இணையவழி குற்றங்கள் பற்றிய ஆய்வாகவே இவ் ஆய்வானது அமைய பெற்றுள்ளது. அந்த வகையில் இணையவழி குற்றங்களின் அடிப்படையாக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் தான் திகழ்கின்றது என்பதனையும் இதனால் சமூகத்தில் ஏற்படுத்தப்படுகின்ற ஒழுக்கமீறுகைகளை கண்டறிவதை நோக்கமாக இவ்வாய்வானது கொண்டுள்ளது. இவ்வாய்வுக்காக கவனக்குழு நேர்காணலானது தரவு திரட்டும் முறையாக பயன்படுத்தப்பட்டது. அது மாத்திரமின்றி நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள், இணையதள தேடல்கள் போன்ற முறைகளின் ஊடாகவும் இவ் ஆய்வானது நகர்த்தப்பட்டுள்ளது.
கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் தான் இணையவழி குற்றங்களுக்கு அடிநாதமாக அமைகின்றது எனும் முடிவுக்கு வர முடிகின்றது. இதன் அடிப்படையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தினை பயன்படுத்துகின்ற பயனர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நுட்பமுறைகள், கொள்கை மற்றும் திட்டமிடுதல் சார்ந்தோர்கள் பின்பற்ற வேண்டிய நியதிகள், மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப வடிவமைப்பாளர்கள் எதிர்காலத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் போன்ற பரிந்துரைகளையும் இவ்வாய்வானது கொண்டுள்ளது |
en_US |
dc.language.iso |
other |
en_US |
dc.publisher |
Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka |
en_US |
dc.subject |
ஊடுருவுதல் |
en_US |
dc.subject |
தரவுத் திருடர்கள் |
en_US |
dc.subject |
இணையவழி குற்றங்கள் |
en_US |
dc.subject |
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் |
en_US |
dc.title |
இணையவழி குற்றங்களில் தகவல் தொழில்நுட்பத்தின் செல்வாக்கு |
en_US |
dc.type |
Thesis |
en_US |