Abstract:
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலைகலாசார பீடத்தின் தத்துவவியல் மற்றும் விழுமியக்கற்கைத்துறையின் கீழ் மெய்யியல் சிறப்புக் கற்கை நெறியின் ஒரு பகுதியினைப் பூர்த்தி செய்யும் பொருட்டு "கிறிஸ்தவ ஒழுக்கவியல் பெண்ணியத்தின் தாக்கம் ஒரு விமர்சன பகுப்பாய்வு" எனும் ஆய்வை சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
அந்த வகையில் ஆய்வின் நோக்கங்களாக :-
1. ஒழுக்கவியலில் கிறிஸ்தவ ஒழுக்கத்தின் தனித்துவம்.
2. பெண்ணியத்தின் இயல்பும் அது கிறிஸ்தவ ஒழுக்கவியலில் கொள்ளும் வகிபாகமும்.
3.கிறிஸ்தவ ஒழுக்கவியலில் உள்ள மாற்றத்தையும், அதன் இயல்பினையும் விளக்குதல.
4. தற்கால நிலையினையும் எதிர்கால நிலையினையும் பகுப்பாய்வு செய்தல்.
இவ்வாறான நோக்கங்களை கொண்டமைந்து மேற்கொள்ளப்பட்டதனை காணக் கூடியதாக உள்ளது. இவ் ஆய்வானது
தற்கால நிலையினையும் எதிர்கால நிலையினையும் பகுப்பாய்வு செய்தல். ஆய்வு நடத்தை சார்ந்தும் நியமங்கள் சார்ந்தும் ஒழுக்க விடயங்களை புதிய வகையில் விளக்குவதனால் இது புதிது காணும் ஆய்வு (Explorative Research) வகையினுள் அமைகிறது. இதனை பூர்த்தி செய்வதற்கு பண்புசார் ஆய்வு முறையே பயன்படுத்தப்படுகிறது. தரவுகளை சேகரிப்பதற்கு இரண்டாம் தராதர மூலங்களும். மூன்றாம் தராதர மூலங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது. நேரடி அவதானம், பேட்டி மூலம் பெறப்பட்ட தரவுகளும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. தரவுகள் பண்புசார் முறையில் பகுப்பாய்வு செய்யப்பட்டு முடிவுகள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறான முறைகளினை கையாண்டே இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.