dc.description.abstract |
மனிதனின் அடிப்படைத் தேவைகளில் உணவு முதலிடம் வகிக்கின்றது. உணவினை உற்பத்தி செய்வதில் விவசாயத்துறை ஆனது பெரும் பங்காற்றுகின்றது. அந்தவகையிலே சனத்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப உணவு உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. இதன் பொருட்டு விவசாய நடவடிக்கைகளின் போது பல்வேறுபட்ட தொழிநுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுக் கொண்டு வருகின்றன. பிறர் நலனில் அக்கறை கொள்ளாது தனது சுய இலாபம் கருதி இவ்வாறு அதிகளவில் விவசாய நடவடிக்கைகளில் பல்வேறு புதிய உத்திகளைப் பாவிப்பதன் காரணமாக ஏற்படக்கூடிய ஒழுக்கப் பிரச்சினைகளை வெளிக்கொணர்வதாக இவ்வாய்வானது அமைந்து காணப்படுகின்றது.
மனித வாழ்வில் நியாயத்தினை போதித்து சீரான வழியில் வாழ வழிகாட்டுவதாக இந்த ஒழுக்க நெறிகள் அமைந்து காணப்படுகின்றன. இதில் முரண்பாடு தோன்றுகின்ற பொழுது ஒழுக்க மீறுகைகள் இடம்பெறுகின்றன.
சமகால விவசாய நடவடிக்கைகளின் போது பயன்படுத்தப்படுகின்ற நவீன உத்திகளே இன்று பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணியாக அமைத்து காணப்படுகின்றது. சூழல் சமநிலைச் சீரழிவு நீர், நிலம், வளி மாசுபடல் போன்ற சூழல் பிரச்சினைகளை தோற்றுவிப்பதுடன் மட்டுமன்றி மனிதனுக்கும் பல்வேறு விதமான சிக்கல்களையும் உண்டு பண்ணுவதனை காணக்கூடியதாக உள்ளது. எனவே இவ்வாறான பிரச்சினைகள் விரிவாக ஆராய்வதாக இவ்வாய்வானது அமைந்து காணப்படுகின்றது.
இரசாயன பதார்த்தங்கள் தீங்குகளை விளைவிப்பது தொடர்பாக அறிவுறுத்தல்கள், எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டாலும் FnL தொடர்ந்தும் அவை பயன்படுத்தப்பட்டுக் கொண்டு வருவதனைக் காணக்கூடியதாக உள்ளது. எனவே இரசாயன பதார்த்தங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் தொடர்பாக விரிவான பார்வையினை செலுத்துவதாகவும் அமைந்து காணப்படுகின்றது.
மேலும் பசுமைப்புரட்சியின் போது உருவாகிய தொழிநுட்பங்கள், மரபணு தொழிநுட்பம் மற்றும் இரசாயனப் பதார்த்தங்கள் போன்றவற்றின் பாவனையினைக் குறைப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள தீர்வுகள் இவற்றின் மூலமாக ஏற்படும் தீங்குகளை குறைத்துக் கொள்ள உதவியாக அமையும், இன்று சமூகம் எதிர்நோக்கும் பாரிய சவாலாக இந்த நவீன தொழிநுட்பங்கள் விளங்குவதன் காரணமாக அது தொடர்பான ஆய்வானது காலத்தின் தேவையாகக் காணப்படுகிறது. எனவே மேற்படி ஆய்வானது சமகால விவசாய நடவடிக்கைகளில் ஏற்படும் ஒழுக்கப்பிரச்சினைகளை குறைப்பதற்கு உதவியாக அமையும். |
en_US |