Abstract:
இலங்கையில் புரதான காலம் முதலாக கரையர் என்பவர் குருநகரில் வாழ்ந்துள்ளனர். அவர்களின் வாழ்வியல் அம்சங்கள் தனித்துவமானவை. கத்தோலிக்க இலங்கைத் தமிழர்களாக காணப்படும் இவர்கள் இலங்கை வரலாற்றில் புறக்கணிக்க முடியாத பாரிய பங்களிப்புகளைச் செய்துள்ளனர். கடல்சார் வணிகத்தில் கைதேர்ந்தவர்களாகத் திகழ்ந்த இவர்கள் இராணுவப் படைப் பிரிவுகளிலும் பணியாற்றியுள்ளனர். வடக்கின் வரலாற்றில் பெரும் பங்குதாரர்களாக குருநகர் மக்கள் திகழ்கின்றன. இவ்வாறான மக்களின் வாழ்வியல் அம்சங்கள் பற்றிய அறிவையும் தெளிவையும் ஏனைய மக்களுக்கு தெரியவைப்பதாக இவ்வாய்வு அமைகின்றது. குருநகர் மக்களின் பண்பாடுகள், வணக்க வழிப்பாட்டுகள், பொருளாதார முறைமைகள், உணவு முறைகள், கலையார்வ நுட்பங்கள், மொழிப் புலமைகள், சொல்லாடல்கள், கல்வி வளர்ச்சிகள் என்பவற்றை வெளியுலகிற்கு தெள்ளத் தெளிவாக எடுத்துரைப்பதாக இவ்வாய்வானது அமைந்துள்ளது. இம் மக்களின் வாழ்வியல் அம்சங்களை அறிய ஆவலாக இருப்போர்களுக்கு வழிகாட்டும் என்பதில் ஐயமில்லை.