Abstract:
இலங்கையில் தொடர்ந்து காணப்படும் அரசியல் ஸ்திரத்தன்மை காரணமாக பொருளாதாரங்களிலும் மக்களின் வாழ்க்கை தரத்திலும் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் இலங்கையில் நாணயமாற்று வீதத்தில் பேரினப் பொருளாதார மாறிகளின் தாக்கம் குறித்த இவ்வாய்வானது 1990-2021 ஆம் ஆண்டு வரையான காலத்தொடர் தரவினை பயன்படுத்தி ஆய்வு செய்யப்பட்டது. இவ்வாய்வின் நோக்கத்தை அடைந்துக்கொள்ளும் பொருட்டு நாணயமாற்று வீதம் சார்ந்த மாறியாகவும் வெளிநாட்டு நேரடி மூதலீட்டு உட்பாய்ச்சல், அரச பொதுப்படுகடன் மற்றும் பணவீக்கம் போன்றன சாராமாறிகளாகவும் எடுத்துக்கொள்ளப்படுகின்றது. இம்மாறிகளுக்கு இடையிலான தொடர்புகளைப் பரீட்சிப்பதற்காக வரைபடங்களும் பொருளியலளவை நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. தரவுகள் E-views கணனி மென்பொருள் துணையுடன் பல்மாறி பிற்செலவு அணுகுமுறையினூடாக பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. அலகுமூல சோதனை, கூட்டு ஒருங்கிணைபு சோதனை. வழுச்சரிப்படுத்தல் மாதிரியுரு போன்ற பொருளியலளவை நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டு முடிவுகள் பெறப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகளின்படி, நாணயமாற்று வீதம் மற்றும் சாரா மாறிகளான அரச பொதுப்படுகடன், பணவீக்கம் மற்றும் வெளிநாட்டு நேரடி மூதலீட்டு உட்பாய்ச்சல் என்பவை போன்றவற்றின் போக்கானது அதிகரித்து செல்வதனை அவதானிக்க முடிகின்றது. மேலும் ஆய்வின் முடிவுகளின்படி, இலங்கையின் நாணயமாற்று வீதத்தின் மீது நீண்ட காலத்தில் அரச பொதுப்படுகடன், மற்றும் வெளிநாட்டு நேரடி மூதலீட்டு உட்பாய்ச்சல் நேர்க்கணியத் தாக்கத்தினையும், பணவீக்கமானது எதிர்க்கணியத் தாக்கத்தினையும் செலுத்துகின்றது. என்ற முடிவுகள் பெறப்பட்டன. கூட்டு ஒருங்கிணைபு தொடர்பு காணப்படுவதுடன், சிறந்த மாதிரியுருக்கான சோதனை முடிவுகளின் அடிப்படையில் தன்னினைவுப் பிரச்சினை, பல்பரவல் தன்மை பிரச்சினை காணப்படாததுடன், வழுவானது செவ்வன்னாகவும் பரம்பியிருக்கின்றது. மேலும் மாதிரியுரு உறுதித் தன்மை வாய்ந்ததாகவும் காணப்படுவதனால் ஆய்விற்காக மதிப்பிடப்பட்ட ARDL (1,4,4,3) மாதிரியுருவானது சிறந்த மாதிரியுருவாக கருதப்படுகிறது.