Abstract:
இந்த ஆய்வானது "பணவீக்கத்தின் மீதான வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறையின் தாக்கம்" (இலங்கை குறித்தான ஓர் அனுபவ ரீதியான ஆய்வு) தொடர்பாக ஆராய்கின்றது. இங்கு பணவீக்கம் சார்ந்த மாறியாகவும் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை முதன்மை சாரா மாறியாகவும், பணநிரம்பல், வட்டி வீதம் மற்றும் வேலையின்மை வீதம் என்பவற்றை துணை சாரா மாறியாக கொண்டு 1990-2022 ஆம் ஆண்டு வரையிலான வருடாந்த காலத்தொடர் தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வானது மாறிகளுக்கிடையிலான நீண்டகால, குறுங்கால தொடர்புகளை விளக்குவதற்காக ARDL மாதிரியுரு, ECM மாதிரியுரு என்பவற்றின் கீழ் அலகுமூலச் சோதனைகள்,நீண்டகால மற்றும் குறுங்கால சோதனைகளும் மாதிரியுருவின் உறுதிப்படுத்தல் மற்றும் ஸதிரத்தன்மை சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆய்வின் முடிவின் படி, வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையானது பணவீக்கத்தில் நீண்டகாலத்தில் எதிர்க்கணியத் தொடர்பினையும் பணவீக்கத்துடன் பணநிரம்பலும் வேலையின்மை வீதமும் நேர்க்கணியத் தொடர்பினையும் கொண்டுள்ளது. மேலும் குறுங்காலத்தில் பணவீக்கத்துடன் பணநிரம்பலின் வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறையின் வேலையின்மை வீதத்தின் கடந்தவருட பெறுமதியும் எதிர்க்கணியத் தொடர்பினைக் கொண்டிருக்கும் அதேவேளை வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறையின் கடந்த வருடப் பெறுமதியும் வேலையின்மை வீதத்தின் நிகழ்காலப் பெறுமதியும் பொருளுள்ள வகையில் நேர்க்கணியத் தொடர்பினைக் கொண்டுள்ளன. இருப்பினும், வட்டிவீதம் பணவீக்கத்துடன் குறுங்காலத்திலோ நீண்டகாலத்திலோ புள்ளிவிபர ரீதியாக பொருளுள்ள வகையில் எவ்வித தொடர்பினையும் கொண்டிருக்கவில்லை என்பதை ஆய்வு முடிவுகள் பிரதிபலிக்கின்றன.