dc.description.abstract |
இன்றைய ஜனநாயக அரசியல் முறைமையில் பிரதிநிதித்துவம் என்பது முக்கியமானதொரு எண்ணக்கருவாக காணப்படுகின்றது. பிரதிநிதித்துவம் என்பது மக்கள், அரசாங்கம் செயற்படுவதற்கான அனுமதியை தங்களில் இருந்து தெரிவாகும் அங்கத்தவர்களின் ஊடாக வெளிப்படுத்துவதை குறிக்கிறது. இது பிரதேச, பிராந்திய மற்றும் தேசிய மட்டங்களில் காணப்படுவதுடன் இருபாலாரினையும் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடியதாகவும் காணப்படுகிறது. இதனடிப்படையில், முஸ்லிம் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் எனும் தலைப்பில் மேற்கெள்ளப்பட்டுள்ளது. இவ் ஆய்வானது வெலிமடை பிரதேசத்தில் முஸ்லிம் பெண்கள் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்ட போதிலும், எந்தவொரு முஸ்லிம் பெண் பிரதிநிதித்துவமும் இப்பிரதேசத்தில் இல்லை என்பதனை ஆய்வுப்பிரச்சினையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இப்பிரதேசத்தில் முஸ்லிம் பெண்களின் பிரதிநிதித்துவமின்மைக்கான காரணங்களைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது முதலாம் மற்றும் இரண்டாம் நிலை தரவு சேகரிப்பு முறைகளைப் பயன்படுத்தி கணிய மற்றும் பண்புசார் ஆய்வு முறைகளை பயன்படுத்தி பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. முதலாம் நிலைத் தரவுகளில் வினாக்கொத்துக்கள் (96) மற்றும் நேர்காணல்கள் என்பன பயன்படுத்தப்பட்டன. இவ் ஆய்வுக்காக படையாக்கப்பட்ட எளிய எழுமாற்று மாதிரியெடுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆய்வுப் பிரதேசத்திலுள்ள 5 கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள முஸ்லிம் பெண்களில் 96 பேர் 41:1 என்ற விகிதத்தினடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு வினாக்கொத்துக்கள் வழங்கப்பட்டன. இவ்வாய்வின் பெறுபேறுகளாக சமய, பொருளாதார மற்றும் குடும்ப பொறுப்பு. UPF கட்சியினை தவிர ஏனைய கட்சிகளில் பிரதிநிதியாக போட்டியிட சந்தர்ப்பம் மற்றும் முன்னுரிமையளிக்காமை போன்ற சில காரணங்களினால் முஸ்லிம் பெண்களின் பிரதிநிதித்துவம் பெறப்படவில்லை என்பதை பகுப்பாய்வின் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. இதனிடையே இம்முடிவுகள் மூலம் பல "புதிய விடயங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதனடிப்படையில், கண்டுபிடிக்கப்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஆய்வின் முடிவில் விதந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆகவே, இவ்வாய்வானது வெலிமடை பிரதேசத்தில் முஸ்லிம் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை அதிகரிப்பதற்கான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்குவதாகவும், எதிர்காலத்தில் முஸ்லிம் பெண்களின் அரசியல்
பிரதிநிதித்துவம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள வழிகாட்டியாகவும் அமையும். |
en_US |