Abstract:
பூகோள ரீதியான அரசியல் பொருளாதார நிலப்பரப்பில் இலத்திரனியல் வர்த்தகம் ஒரு சக்தி வாய்ந்த துறையாக உருவெடுத்துள்ளது. பூகோள ரீதியாக ஏற்பட்டுள்ள தொழில்நுட்பப் புரட்சியினை ஏற்றுக்கொண்டு சீனா, அமெரிக்கா, ஐக்கிய இராஜ்யம் போன்ற அபிவிருத்தி அடைந்த நாடுகள் அரசியல் பொருளாதார ரீதியாக இலத்திரனியல் வர்த்தக கொள்கைகளையும் சட்டங்களையும் வடிவமைத்து பாதுகாப்பு முயற்சிகளுடன் இலத்திரன்கள் வருத்தத்தில் ஈடுபட்டு வெற்றியடைந்துள்ளன. இதனை அடிப்படையாகக் கொண்டு உலக நாடுகள் அனைத்தும் இலத்திரனியில் வர்த்தகத்தினை உள்வாங்கி வருகின்றன. எனவே இலங்கையின் இலங்கையின் அரசியல் பொருளாதாரமும் எதிர்கால இலத்திரனியல் வர்த்தகத்தினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. இலங்கையின் அரசியல் பொருளாதாரம் இலத்திரன்கள் வர்த்தகக் கொள்கையினை உள்வாங்கிக் கொள்வதற்கு அரசியல் பொருளாதார ரீதியான சட்டங்களும் அவசியமானவையாகும். இலங்கை இலத்திரனியால் வர்த்தகத்திற்கான பாதுகாப்பு செயற்பாடுகளை ஏற்படுத்துவதில் ஆரம்ப கட்டத்தில் இருக்கின்றது. இதனை நோக்காக கொண்டு இவ்வாய்வு எதிர்கால அரசியல் பொருளாதாரமாக இலத்திரனியில் வர்த்தகக் கொள்கையினை இலங்கை ஏற்றுக் கொண்டு அதன் புத்தகத்திற்கும் வளர்ச்சிக்குமான ரீதியான தீர்வுகளை முன்வைக்கின்றது. பிரதானமாக இலங்கையின் அரசியல் பொருளாதார ரீதியாக இலத்திரனியல் வர்த்தகக் கொள்கையினை அமுல்படுத்துவதற்கு இலத்திரனியில் வர்த்தக மாதிரியினை கொள்கையாக முன்வைக்கின்றது. சமகால இலத்திரனியில் வர்த்தகத்தின் வளர்ச்சிக்கு இலங்கை அரசாங்கத்தினால் வகுக்கப்பட்டுள்ள சட்டங்களை பகுப்பாய்வு செய்து சட்ட இடைவெளிகளை கண்டறிந்து இலத்திரனியல் வர்த்தகத்தின் பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்கும் அவசியமான சட்ட வரைவுகளுக்கான ஆலோசனைகளையும் முன்வைக்கின்றது. இதனூடாக இலத்திரனியல் வர்த்தகத்தினை உள்வாங்கிக் கொண்ட அரசியல் பொருளாதாரமாக இலங்கையின் அரசியல் பொருளாதாரத்தினை மாற்றி அமைப்பதன் ஊடாக அந்நிய செலாவணி உள்ளீர்பு முயற்சியல் நாட்டு மக்களையும் இணைத்துக் இணைத்துக் கொள்ள முடியும்.