dc.contributor.author |
முஹம்மத் சாகீர், சகூர்தீன் |
|
dc.date.accessioned |
2024-10-01T05:17:03Z |
|
dc.date.available |
2024-10-01T05:17:03Z |
|
dc.date.issued |
2023 |
|
dc.identifier.citation |
FAC 1423 |
en_US |
dc.identifier.uri |
http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15814 |
|
dc.description.abstract |
மனித உரிமை என்பது மனிதனுக்கு இயற்கையாகக் கிடைத்த ஒரு அருட்கொடையாகும். அதனை பாதுகாப்பது ஒவ்வொரு மனிதனதும் பொறுப்பாகும். இருப்பினும் மனித உரிமைகள் மீறப்படுவதும் பறிக்கப்படுவதும் மறுதலிக்கப்படுவதும் உலகில் தொடர் கதையாகவே நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இதற்கு மூல காரணம் என்னவென்று நோக்கும் போது, மனிதர்களுக்கு அது பற்றிய சரியான அறிவோ தெளிவோ காணப்படாமையே ஆகும். இவ்வுலகில் தோன்றிய மதங்கள் மனிதனுடைய வாழ்வை சீர் செய்யும் நோக்கிலும் நெறிப்படுத்தும் நோக்கிலுமே தோன்றியுள்ளன. அவை மனிதனுக்குத் தேவையான அனைத்து உரிமைகளையும் வழங்கியிருப்பது நிதர்சனமான உண்மை. அவ்வாறிருப்பினும் சமயங்களில் மூழ்கியவர்களும் கூட சமயத் தீவிரப் போக்கைக் கொண்டுள்ளனரே தவிர அவை குறிப்பிடுகின்ற ஒழுக்கநெறி விழுமியங்களையோ, மனிதப் பண்புகளையோ பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. இதற்குக் காரணம் அவை பற்றிய அசிரத்தையான தன்மையும் அறியாமையுமேயாகும். இவ்வாய்வானது கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய சமயங்கள் குறிப்பிடுகின்ற மனித உரிமைகள் பற்றிய விளக்கமான தெளிவை வழங்குவதுடன் அவற்றுள் குறிப்பிட்ட சில மனித உரிமைகள் பற்றிய தெளிவினையும் வழங்குகின்றது. அத்துடன் அண்மையில் வெளிவந்த மனித உரிமைகள் சாசனத்தின் மூலம் உலகிற்கு வழங்கிய மனித உரிமைகள் பற்றிய தெளிவினையும் வழங்குகின்றது. இவ்வாய்வானது இவை மூன்றையும் ஒப்பிட்டு ஆய்வு செய்ததன் மூலமாக மனித உரிமைகள் பற்றிய தெளிவனை தருவதன் மூலம் மனிதர்களுக்கு அவர்களுடைய உரிமைகளைப் பெற்றுக் கொள்ளவும் பாதுகாக்கவும் வழி அமைத்துக் கொடுக்கிறது.
ஆய்வின் முறையியலாக இரண்டாம் நிலைத் தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், சேகரிப்பு முறையான நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் மற்றும் இணையத்தளத் தரவுகள் என்பன இவ்வாய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இத் தரவுகளைப் பயன்படுத்தி பண்புசார் ரீதியான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மனித உரிமை பற்றிய தெளிவினைப் பெற்றுக் கொள்ளல், சமயங்கள் தந்துள்ள மனித உரிமைகளைப் பாதுகாத்து அவற்றை முறையாகப் பயன்படுத்துதல், மனித உரிமை மீறப்படுவதையும். மறுதலிக்கப்படுவதையும். பரிக்கப்படுவதையும் சமூகத்தில் மாற்றியமைத்தல் என்பவற்றையும் மனித உரிமை பற்றிய சரியான தெளிவின் மூலம் அமைத்துக் கொண்டு மனித வாழ்வை சீரமைக்க முடியும். |
en_US |
dc.language.iso |
other |
en_US |
dc.publisher |
Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka |
en_US |
dc.subject |
மனித உரிமை |
en_US |
dc.subject |
கிறிஸ்தவம் |
en_US |
dc.subject |
இஸ்லாம் |
en_US |
dc.subject |
மனித உரிமை மீறல் |
en_US |
dc.subject |
மனித உரிமை சாசனம் |
en_US |
dc.title |
மதமும் மனித உரிமையும் - கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயங்களை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஒப்பீட்டாய்வு |
en_US |
dc.type |
Thesis |
en_US |