Abstract:
இவ்வாய்வானது உலகில் அதிகமான மதங்களில் பேசப்படுகின்ற கன்மம் மறுபிறப்பு பற்றிய சிந்தனையினை ஆய்வு செய்வதாக அமைகின்றது. ஆய்வின் விரிவுக்கு அஞ்சி இஸ்லாம், பௌத்த சமயங்கள் கூறும் கன்மம், மறுபிறப்பு சிந்தனையினை எடுத்தாராய்வதாக உள்ளது. அதிலும் குறிப்பாக இஸ்லாம் என்ற வகையில் அல்குர்ஆனையும் பௌத்தம் என்ற வகையில் திரிபிடகத்தையும் இவ்வாய்வானது அடிப்படையாகக் கொண்டுள்ளது. கன்மம் என்றால் செயல், வினை எனப் பொருள்படுகின்றது. கன்மம் என்பது மனிதன் ஒவ்வொருவரும் செய்கின்ற செயலையும். செயலின் பயனையும் குறிப்பதாக அமைகின்றது. இத்தகைய கன்மம் பற்றிய சிந்தனையானது அனைத்து மதங்களுக்கும் பொதுவான சிந்தனையாக காணப்பட்ட போதிலும் சில வேற்றுமைகளை உள்ளடக்கி இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வாய்வின் பொருட்டு எடுத்துக் கொள்ளப்பட்ட பௌத்த, இஸ்லாம் சமயங்களிலும் கூட இக் கன்மம் என்ற சிந்தனை குறித்து பல வேற்றுமை பண்புகள் உள்ள போதிலும் சில ஒற்றுமை போக்குகளும் தென்படுவதை இவ்வாய்வு எடுத்துக் கூறுகின்றது. இவ்விரு சமயங்களுக்குமிடையே உறவு நிலையினை மேம்படுத்தும் நோக்கமாக முன்னெடுக்கப்படுகின்ற இவ்வாய்வானது இரண்டாம் நிலை தரவுகளாகிய உரைநூல்கள், ஆய்வு நூல்கள், சஞ்சிகைகள், இணையத்தள தகவல்கள் ஆகியவற்றை ஆய்வு மூலங்களாக கொண்டுள்ளது. இவ்வாய்வு உள்ளடக்க பகுப்பாய்வு, ஒப்பீட்டு பகுப்பாய் போன்ற முறையியல்களையும் உள்ளடக்கி உள்ளது எனலாம்.