dc.description.abstract |
பெண் தெய்வ வழிபாட்டு மரபின் கண்ணகி வழிபாடானது பிரசித்தி பெற்று காணப்படுகின்றது. அந்த வகையில் வடமகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் பெண் தெய்வ வழிபாட்டுத் தலங்களில் பிரசித்தம் பெற்ற தலமாக வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயம் காணப்படுகின்றது. பாரம்பரிய வழிபாட்டு மரபுகளும் தற்கால மாற்றங்களும் வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயத்தினை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஒப்பட்டாய்வு என்ற தலைப்பின் ஊடாக பாரம்பரிய ஆகமம் சாராத வழிபாட்டு மரபுகளும், தற்காலத்தில் ஆகமம் சார்ந்த, ஆகமம் சாராத இரு முறைகளிலும் இடம் பெற்று வருவதனைக் காணமுடிகின்றது. இவ்வாய்வானது இத்தகைய ஆரம்ப கால, தற்கால வழிபாட்டு மாற்றங்களுக்கான காரணங்களை கண்டறிவதையே பிரதான நோக்கமாகக் கொண்டு காணப்படுகின்றது.
ஆய்வின் முறையியலாக அளவையல், பண்பு ரீதியிலான தகவல்கள் மூலம் தரவுகளைச் சேகரித்தல். இரண்டாம் நிலைத்தரவுகளாக நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், மற்றும் இணையத்தளத் தரவுகள் என்பன இவ்வாய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி பண்புசார் ரீதியான ஆய்வு பயன்படுத்தப்பட்டுள்ளது.
நவீன நாகரீகத்தின் வளர்ச்சியின் காரணமாக வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயத்தில் பாரம்பரிய வழிபாட்டு மரபுகள், தற்கால நவீன நாகரீகத்தின் வளர்ச்சியால் பாரிய மாற்றங்களையும் நன்மைகளையும் கண்டறிவதன் மூலம் தற்கால சந்ததியினருக்கும். எதிர்கால சந்ததியினருக்கும் சரியான வழிபாட்டு முறைகளை தெரிந்து கொள்வதற்கும், அவற்றை ஆராய்ந்து தற்காலத்தில் மாற்றங்களுக்கான காரணங்களையும், எதிர்காலத்தில் மக்கள் மத்தியில் வழிபாட்டு முறைகளையும், நம்பிக்கைகளையும் ஏற்படுத்தி கொள்வதற்கு சிறந்த பாதையை உருவாக்க முடியும். |
en_US |