Abstract:
இன்றைய காலகட்டத்தில் பல ஆய்வுகள் பலரினாலும் மேற்கொள்ளப்படுகின்றது. ஆனாலும் அவை வெறுமனே உலகியல் சார்ந்த விடயங்களை பிரதிபலித்தும் நடைமுறை சார் அம்சங்களை உள்ளடக்கியுமே மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் ஆய்வுகளானது பெரும்பாலும் அறிவியல் சார்ந்ததாக மேற்கொள்ளப்படுகின்ற நிலையானது மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றது. இதனால் மக்கள் மத்தியில் அறிவியல் சார் எண்ணங்களும் கருத்துக்களும் மிகவும் குறைந்ததாகவே காணப்படுகின்றது. இதனால் அறிவியல் தொடர்பான விரிவான ஆய்வுகள் என்பது பெரும்பாலும் இடம்பெறாமலே அவை மாறிவிட்டன. இக்குறைபாட்டினை ஓரளவு பூர்த்தி செய்யும் முகமாகவே "இந்து மரவில் அறிவியல் - மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு" என்னும் இவ்வாய்வானது என்னால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதாவது மகாபாரதம் பற்றிய கதைகளும் அவை பற்றிய விளக்கங்களும் மக்கள் மத்தியில் ஓரளவு காணப்பட்ட போதிலும் அவற்றிலே காணப்படுகின்ற அறிவியல் பூர்வமான விளக்கங்களை மக்கள் பெரும்பாலும் உணராமலே காணப்படுகின்றனர். இதனால் அறிவியல் சார்ந்த விடயங்களை மக்கள் மத்தியில் ஓரளவு கொண்டு சேர்க்கும் முகமாகவே இவ்வாய்வானது என்னால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையிலே மகாபாரதத்தில் உள்ள அறிவியல் சார்ந்த பல விடயங்களை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தும் வகையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவை எதிர்காலத்தில் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கின்றேன். அத்துடன் இவ்வாய்வானது எதிர்காலத்தில் ஏனைய இந்து சமய நூல்களில் காணப்படும் அறிவியல் சார்ந்த விடயங்களை ஆய்வு செய்வதற்கும் முன்னோடியாக அமையும் என்பதை எதிர்பார்க்கின்றேன்.