Abstract:
நகர்ப்புற விரிவாக்கம் பல பரிமாணங்களைக் கொண்டதுடன் சிக்கல் தன்மை வாய்ந்ததாகவும் விளங்குகிறது. இன்று நகர விரிவாக்கத்தை பல காரணிகள் தீர்மானிக்கின்றன. அத்தோடு இன்று நகரங்களில் எதிர்க்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளுல் ஒன்றாக நகர்ப்புற விரிவாக்கம் விளங்குகிறது. எனவே கண்டி மாநகர சபைக்குட்பட்ட பகுதிக்கு நகர விரிவாக்க சார் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வது அவசியம் என்பதால் "கண்டி நகர விரிவாக்கமும் அதனால் உருவாகும் பாதகமான விளைவுகளும்" எனும் தலைப்பில் இவ் ஆய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ் ஆய்வாய்வானது நகர விரிவாக்க காரணிகளையும் அதன் பாதகமான விளைவுகளை கண்டறிவதை பிரதான கொண்டுள்ளது. நோக்கமாக
இவ் ஆய்விற்காக முதலாம் நிலை மற்றும் இரண்டாம் நிலைத்தரவுகளை அடிப்படையாக கொண்டு Ms Excel-2010, Arc GIS 10.6 மென்பொருட்களினைக் கொண்டு இவ் ஆய்வானது அளவு ரீதியான மற்றும் விபரண ரீதியான ஆய்வாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் கண்டி மாநகர சபைக்குட்பட்ட பல்வேறு நகர விரிவாக்க காரணிகளும் அவற்றினால் ஏற்படுத்தப்படும் பாதகமான விளைவுகளை கண்டறிந்து இவ் ஆய்வின் பெறுபேறுகளாக முன்வைக்கப்பட்டன.
அத்துடன் ஆய்வுப்பிரதேசத்தில் நகர விரிவாக்கச் செயன்முறையானது பல்வேறு பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதாக அடையாளங் காணப்பட்டது.அவற்றுள் போக்குவரத்து நெரிசல். வளி மற்றும் ஒளி மாசடைதல், இயற்கை அனர்த்தங்களான வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு,நகர நீர் வளப் பகிர்வு சார் பிரச்சினைகளும் நீர் மாசடைதலும், இயற்கை உணர்த்திறன்மிக்க பகுதிகளில் நகரம் விரிவடைதல் என்பன கண்டி மாநகர சபைக்குட்பட்ட பிரிவில் செல்வாக்கு செலுத்துகின்றது.இவ்வாறாக பாதகமான விளைவுகளை குறைப்பதற்காக வாகனங்களைக் கட்டுப்படுத்துவது, திண்மக்கழிவுகளை முகாமைச் செய்தல், நில மாசுப்பாடுகள் தொடர்கபான சட்டங்களை நடைமுறைப்படுத்தல், நீர்ப்புயற் மேலாண்மை. இயற்கை உணர்திறன்மிக்க பகுதிகளை பாதுகாக்க தடுப்பு மண்டலங்களை உருவாக்கல், NBRO மூலம் கட்டிட அனுமதிக்கான வரையறைகளை விதித்தல் என்பவற்றின் மூலம் கண்டி மாநகரத்தில் நகர விரிவாக்கத்தினால் ஏற்படும் பாதமான விளைவுகளைக் குறைத்துக் கொள்ளக்கூடியதாக அமையும்.