dc.description.abstract |
மண்முனை தென் எருவில் பற்றுப் பிரதேச செயலகப் பிரிவில் ஆய்வுக்காக தெரிவு
செய்யப்பட்ட பிரதேசமானது கண்டல் தாவரச் சூழலை பிரதானமான வளமாகக்
கொண்ட பிரதேசமாகும். அப்பிரதேசத்தில் குறிப்பாக 1985 ஆம் ஆண்டுகளுக்கு
பின்னர் அழிவடைந்து வரும் நிலையில் உள்ளன. மற்றும் கண்டல் தாவரச் சூழல்
தொகுதியானது மானிடக் காரணிகளால் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி
வருகின்றன. இவ் பிரச்சினையை மையமாகக் கொண்டு இவ்வாய்வின் பிரதான
நோக்கம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாகப் பிரிவுக்கு உட்பட்ட
பகுதிகளில் கண்டல் தாவரச் சூழல் தொகுதி எதிர்கொள்ளும் சவால்களை கண்டறிதல்
ஆகும். கண்டல் தாவரப் பரம்பல்களை அடையாளம் காணுவதாகவும், கண்டல்
தாவரச் சூழலினால் வழங்கப்படும் சேவைகளும் வெளிக்கொணரப்பட்டும், இச் சூழல்
தொகுதி எவ்வாறான சவால்களை எதிர்கொண்டு வருகின்றன என்பன தொடர்பாகவும்
ஆராயப்பட்டுள்ளது. ஆய்வானது அளவு ரீதியான மற்றும் பண்பு ரீதியான இரு
முறையியல்களையும்
உள்ளடக்கிய
கலப்பு முறை ஆய்வாக
முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆய்விற்குத் தேவையான தரவுகள் முதலாம் நிலை
தரவுகள் என்ற ரீதியில் வினாக்கொத்து, நேர்காணல், நேரடி அவதானிப்பு என்ற
அடிப்படையிலும், இரண்டாம் நிலை தரவுகளாக மாவட்ட புள்ளிவிபர அறிக்கைகள்,
களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக அறிக்கைகள், கரையோரம் பேணல் திணைக்கள
அறிக்கைகள், இணையதளங்கள், முன்னைய ஆய்வுக் கட்டுரைகள்
ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டுள்ளன. வினாக்கொத்திற்காக ஆய்வு பிரதேசத்தில்
நான்கு கிராம சேவகர் பிரிவுகளிலும் உள்ள மொத்த குடும்பங்களில் 67 குடும்பங்கள்
மாதிரியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. GIS தொழில்நுட்பத்தின் ஊடாகவும் Google
Earth Pro ஊடாகவும் கண்டல் தாவரங்களினுடைய பரம்பல் மற்றும் ஆய்வுப்
பிரதேசத்தின் நிலப் பயன்பாட்டு படமாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆய்வுப் பிரதேசத்தின்
தரைக்கீழ் நீர்மட்டம், குடியிருப்பு அடர்த்தி, சனத்தொகை அடர்த்தி வேறுபாடு
போன்றனவும் படமாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆய்வின் பெறுபேற்றின் படி 75
சதவீதமான பகுதிகளில் கண்டல் தாவர சூழலின் பரம்பலும், அவை அதிகம்
அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வரும் பகுதிகளாகவும், 20 சதவீதமான பகுதிகளில்
கண்டல் தாவர சூழலின் இருப்பு குறைவடைந்துள்ள நிலையும், 5 சதவீதமானவை
கடற்கரை மணல் திட்டு சார்ந்த பகுதிகளில் கண்டல் தாவரங்களின் இருப்பும்
அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆய்வு பிரதேசத்தில் பௌதீக காரணிகளை விட
மானிடக் காரணிகளே கண்டல் தாவரங்களின் அழிவுக்கு பிரதான காரணியாக
இனங்காணப்பட்டுள்ளதோடு, கண்டல் தாவரச் சூழல் தொகுதி பாதுகாக்கப்பட
வேண்டியது அவசியமாகையினால் இதற்கான முகமைத்துவ நடவடிக்கைகளை
உள்ளுர் மட்டங்களில் உடனடியாக முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும். |
en_US |