முபிஸால் அபூபக்கர்
(சுதந்திர ஆய்வு வட்டம், 2018)
கார்ல் ஹென்றி மார்க்ஸ் ஜேர்மனியின் டிரியர் எனும் நகரில் 1818
மே மாதம் 5ம் திகதி ஹென்றிச் மார்க்ஸ் என்பவரின் மகனாகப் பிறந்
தார். சட்டப்படிப்பை போர்ன் பல்கலைக்கழகத்திலும் போர்லின்
பல்கலைக்கழகத்திலும் மேற்கொண்டார். சட்டம், ...